பாடல் #35608
சீயோனின் சிகரங்களில்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
சீயோனின் சிகரங்களில் பொதிகை தென்றல் மோதக் கண்டேன் சாரோனின் பள்ளங்களில் மதுரை மல்லி மலரக் கண்டேன் கீழ்திசையின் ஞானமெல்லாம் மேற்றிசையில் பரவக் கண்டேன் இகமெங்கும் இயேசுவின் அன்பில் இறைமாந்தர் இணையக் கண்டேன் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் 1. பாருக்குள் நல்ல நாடு - எங்கள் பாரதிபாடிய பைந்தமிழ் நாடு இமயமுதல் குமரி வரை இயேசுவே தெய்வம் என முழங்க பாரத நாடு நாம் அதன் புதல்வர் மறந்திடவேண்டாம் தயங்கிடவேண்டாம் - வந்தே 2. இயேசுவை தொட்டு பார்த்தவனும் - கா லாற நடந்துசென்ற செந்தமிழ் நாடு இந்து தேசமென திருமறையும் தெளிவாய் சொல்லும் சீர்மிகு நாடு உயிர்கொடுத்தேனும் தாயகம் காப்போம் இந்தியர் என்றே தலை நிமிர்ந்துரைப்போம் - வந்தே 3. இறைவனைத்தொழும் வழிமுறைகள் - இந்த இத்துக்கே தந்த இந்திய நாடு இலக்கியங்கள் காப்பியங்கள் இறை நெறிதந்த பெரும்புலவர் வாழ்ந்த எம் நாடு வளமிகு நாடு ஓங்கிடவேண்டும் உயர்ந்திடவேண்டும் - வந்தே