பாடல் #35606
வானமே வழிவிடு
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
வானமே வழிவிடு வேந்தன் இயேசு வருகிறார் மேகமே புறப்படு விரைவில் இயேசு வருகிறார் - வானமே மின்னலைப்போல வருவார் - வான தூதர்கள் காகளம் முழங்க வானமும் பூமியும் அதிர்ந்திடவே கிறிஸ்துவில் மரித்தவர் எழுந்திடவே நாமும் எதிர் கொள்ளுவோம் - நம் இயேசுவை நாளும் தொழுதிடுவோம் கள்ளனைப் போல வருவார் - நல்ல பலன் எந்தன் கிரியைக்கு தரவே மண்ணின் சாயலை எறிந்திடுவோம் விண்ணவர் சாயலை அணிந்திடுவோம் இராச ராசனுடன் சிங்காசனம் நாமும் அமர்ந்திடுவோம் மாப்பிள்ளைப் போல வருவார் மணமகளாம் திருச்சபை ஏற்க கறை திறையில்லாத கன்னிகையாய் கரங்களில் தீபங்கள் ஏந்திடுவோம் வாசல் திறந்திடுவார் நாம் ஆள - சிங் ஆசனம் வழங்கிடுவார்