பாடல் #35605
எந்தன் ஆண்டவர் இயேசுவே
🔤 Endhan Aandavar Yesuvae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஆண்டவர் இயேசுவே எனது வாழ்வும் இயேசுவே எந்தன் ஆவி ஆத்மா சரீரம் ஏற்றியும்மை போற்றுமே 1. பிரியமில்லா ஆண்டுகள் - பெரும் தீங்கு நாட்கள் வருமுன்னே எந்திர ஒசை தாழ்ந்ததால் - தெரு வாசல் கதவுகள் அடைக்குமுன் சந்திர சூரியன் வான் சுடர்கள் வெளிச்சம் இருளாய் போகுமுன் எனது மனமும் எனது சிந்தையும் உம்மை நினைத்தே பாடுமே 2. மழைக்குபின் முகில் திரும்புமுன் - சிலர் அரைக்கும் எந்திரம் ஓயுமுன் வீட்டு காவலர்தள்ளாடுமுன் - பெல சாலிகள் கூனி வளையும் மீன் சன்னல் வழியே பார்க்கும் கண்கள் இருண்டு குருடாய் போகும்முன் கீதவாத்திய கன்னியர் பாடல் அடங்கி போகுமுன் பாடுவேன் 3. வாதுமை மரம் பூக்கும் முன் - மேட்டு வழியில் அச்சம் தோன்றுமுன் வெட்டுக் கிளியும் பாரமாகி - நம் தட்டில் தீபனம் வற்றிடும் முன் நித்திய வீட்டுக்கு போவதால் - சிலர் புலம்பி வீதியில் திரியும் முன் நித்திய ஜீவன் வாக்குகொடுத்த சத்திய தேவனை பாடுவேன் 4. வெள்ளி கயிறு கட்டு விட்டு - தங்க கிண்ணி உடைந்து நசுங்கு முன் ஊற்றின் அருகே சால் உடைந்து துரவின் உருளை நொறுங்குமுன் இவ்விதமாய் தான் இருந்த பூமிக்கு மண்ணும் திரும்பி போகுமுன் ஆவி தன்னை தந்தவர் பாதம் சேறும் முன் உம்மை பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Aandavar Yesuvae Enathu Vaazhvum Yesuvae Endhan Aavi Aathmaa Sareeram Aerriyummai Porrumae 1. Piriyamillaa Aantugal - Perum Theengku Naatkal Varumunnae Enthira Osai Thaazhndhathaal - Theru Vaasal Kathavugal Ataikkumun Santhira Sooriyan Vaan Sudarkal Veliccham Irulaay Pokumun Enathu Manamum Enathu Sinthaiyum Ummai Ninaitthae Paatumae 2. Mazhaikkupin Mukil Thirumpumun - Silar Araikkum Enthiram Oyumun Veettu Kaavalarthallaatumun - Pela Saaligal Kooni Valaiyum Meen Sannal Vazhiyae Paarkkum Kankal Iruntu Kurutaay Pokummun Keedhavaatthiya Kanniyar Paadal Adangki Pokumun Paatuvaen 3. Vaathumai Maram Pookkum Mun - Maettu Vazhiyil Accham Thonrumun Vettuk Kiliyum Paaramaaki - Nam Thattil Theebanam Varritum Mun Nitthiya Veettukku Povathaal - Silar Pulampi Veethiyil Thiriyum Mun Nitthiya Jeevan Vaakkukotuttha Satthiya Devanai Paatuvaen 4. Velli Kayiru Kattu Vittu - Thangga Kinni Utainthu Nasungku Mun Oorrin Arukae Saal Utainthu Thuravin Urulai Norungkumun Ivvidhamaay Thaan Irundha Poomikku Mannum Thirumpi Pokumun Aavi Thannai Thandhavar Paadham Saerum Mun Ummai Paatuvaen