பாடல் #35604
சந்தோஷம் இயேசுவே
🔤 Santhosham Yesuvae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷம் இயேசுவே சமாதானம் இயேசுவே செல்வமெல்லாம் இயேசுவே சுகஜீவியம் இயேசுவே 1. கண்ணீர் துடைக்கும் இயேசுவே செந்நீர் சிந்திய இயேசுவே பன்னீர் போன்ற தூய்மையான அன்பு தந்த இயேசுவே 2. நித்திய ஜீவன் இயேசுவே சத்திய ஜீவன் இயேசுவே பத்திரமாக எங்களை காக்கும் சத்திய தேவன் இயேசுவே 3. ஜீவ தண்ணீர் இயேசுவே ஜீவபலி இயேசுவே நிச்சயமாக மோட்சத்திலே சேர்த்துக்கொள்ளும் இயேசுவே 4. கன்மலையாம் இயேசுவே புகலிடமும் இயேசுவே பாவம் போக்கி தூய்மையாக்கி தாகம் தீர்க்கும் இயேசுவே 5. தாயைப் போல இயேசுவே நல்ல மீட்பர் இயேசுவே தந்தைபோல தோளின்மீது ஏந்தி செல்லும் இயேசுவே 6. தலை மகன் இயேசுவே தளபதியாம் இயேசுவே களைத்துப் போகும் நேரத்தில் என் இளைப்பாருதல் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosham Yesuvae Samaathaanam Yesuvae Selvamellaam Yesuvae Sugajeeviyam Yesuvae 1. Kanneer Thutaikkum Yesuvae Senneer Sinthiya Yesuvae Panneer Pondra Thooymaiyaana Anpu Thandha Yesuvae 2. Nitthiya Jeevan Yesuvae Satthiya Jeevan Yesuvae Patthiramaaga Enggalai Kaakkum Satthiya Devan Yesuvae 3. Jeeva Thanneer Yesuvae Jeevapali Yesuvae Nicchayamaaga Motsatthilae Saertthukkollum Yesuvae 4. Kanmalaiyaam Yesuvae Pugalidamum Yesuvae Paavam Pokki Thooymaiyaakki Thaagam Theerkkum Yesuvae 5. Thaayaip Pola Yesuvae Nalla Meetpar Yesuvae Thanthaipola Tholinmeethu Aenthi Sellum Yesuvae 6. Thalai Makan Yesuvae Thalapathiyaam Yesuvae Kalaitthup Pokum Naeratthil En Ilaippaarudhal Yesuvae