பாடல் #35602
தென்றலை சுவாசிக்கிறேன்
🔤 Thendralai Suvaasikkiraen
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தென்றலை சுவாசிக்கிறேன் - உந்தன் வசனம் சுமப்பதால் - குழல் ஓசையை நேசிக்கிறேன் - வேத வார்த்தை கலந்ததால் - நீல வானத்தை ரசிக்கிறேன் - உந்தன் மகிமை தெரிவதால் - இந்த இயற்கையை ருசிக்கிறேன் - அதில் உம்மை காண்பதால் - குளிர் 1. காட்டுமலர்கள் அழகில் உந்தன் படைப்பை காண்கிறேன் - வானம் பாடி வானில் பறக்கும்போ தும் அன்பை காண்கிறேன்-இடி மின்னல் மழையின் நடுவில் உந்தன் வல்லமை காண்கிறேன் குயிலோசையின் இனிமையில் மன நிறைவு காண்கிறேன்-குளிர் 2 உறைந்த பனியின்மென்மையில் உந்தன் கிருபை காண்கிறேன் - கார் மேகம் வானில் அலையும் போதும் வருகை நினைக்கிறேன் - மரம் செடிகொடிகளின் சலசலப்பு உம் கருணை காண்கிறேன் சிட்டு குருவிகள் வாழ்க்கையில் முழு நம்பிக்கை காண்கிறேன் புது 3. வானவில்லின் வண்ணங்களில் உயர் வாழ்வு காண்கிறேன்-விடி வெள்ளி சுடரின் பயணத்தில் உம் பிறப்பை நினைக்கிறேன்-புயல் காற்று வெள்ளம் பூமி அதில் அச்சம் காண்கிறேன் - வேத வசன தியானம் தொடரும் நேரம் அமைதி காண்கிறேன்-குளிர் 4. தூய கரங்கள் உயர்த்தி நானும் ஜெபிக்கும் போதிலே-தூய ஆவி என்னை ஆற்றி தேற்றும் உண்மை காண்கிறேன் -துதி புலிகள் செலுத்தி போற்றும் போது மகிழ்ச்சி காண்கிறேன்-அந் தினம் தினம் உம் தூய பிரசன்னம் நிரம்ப காண்கிறேன் - புது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thendralai Suvaasikkiraen - Undhan Vasanam Sumappathaal - Kuzhal Osaiyai Naesikkiraen - Vaedha Vaartthai Kalandhathaal - Neela Vaanatthai Rasikkiraen - Undhan Makimai Therivathaal - Indha Iyarkaiyai Rusikkiraen - Athil Ummai Kaanpathaal - Kulir 1. Kaattumalarkal Azhakil Undhan Pataippai Kaankiraen - Vaanam Paati Vaanil Parakkumpo Thum Anpai Kaankiraen-iti Minnal Mazhaiyin Natuvil Undhan Vallamai Kaankiraen Kuyilosaiyin Inimaiyil Mana Niraivu Kaankiraen-kulir 2 Uraindha Paniyinmenmaiyil Undhan Kirupai Kaankiraen - Kaar Maegam Vaanil Alaiyum Pothum Varukai Ninaikkiraen - Maram Setikotigalin Salasalappu Um Karunai Kaankiraen Sittu Kuruvigal Vaazhkkaiyil Muzhu Nampikkai Kaankiraen Puthu 3. Vaanavillin Vannanggalil Uyar Vaazhvu Kaankiraen-viti Velli Sudarin Payanatthil Um Pirappai Ninaikkiraen-puyal Kaarru Vellam Poomi Athil Accham Kaankiraen - Vaedha Vasana Thiyaanam Thodarum Naeram Amaithi Kaankiraen-kulir 4. Thooya Karanggal Uyartthi Naanum Jepikkum Pothilae-thooya Aavi Ennai Aarri Thaerrum Unmai Kaankiraen -thuthi Puligal Selutthi Porrum Pothu Makizhchsi Kaankiraen-an Thinam Thinam Um Thooya Pirasannam Niramba Kaankiraen - Puthu