பாடல் #35601
என்னடா உலகமிது
🔤 Ennataa Ulakamithu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னடா உலகமிது - நில்லடா தலைநிமிர்ந்து காலமிதை தவறவிட்டால் - வாழ்வேது மனந்திரும்பு 1. நல்லவனை கெட்டவனென்று நாளேடுகள் சொல்லுது - இந்த கெட்டவனை நல்லவனென்று சாட்சி சொல்லுது தொலைக்காட்சி சொல்லுது விளம்பரத்தால் உயர்ந்தவர்கள் இல்லையென்றது யாரடா - வெறும் விளம்பரத்தால் பொய்யைக்கூட மெய்யாக்குறானடா அது உண்மைதானடா பொய்யோடு மெய் கலந்து காசு சேர்க்கிறான் - ஸ்விஸ் பேங்கில் சேர்க்கிறான் 2. காசு பணம் பெருத்தவன்தான் தலைவனாக முடியுது - தானை கல்வி கற்று வாங்கின பட்டம் காற்றில் பறக்குது பண காற்றில் பறக்குது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொன்னது யாரடா - தெரு கோடியிலே நின்றாலும் கூட யாரடா உன்கூட வருவதாரடா காதறுந்த ஊசிகூட வருவதேதடா உன்கூட வருவதேதடா என்னடா உலகமிது நில்லடா தலைநிமிர்ந்து காலமிது தவறிடாமல் இயேசுவிடம் மனந்திரும்பு - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennataa Ulakamithu - Nillataa Thalainimirnthu Kaalamithai Thavaravittaal - Vaazhvaethu Mananthirumpu 1. Nallavanai Kettavanenru Naalaetugal Solluthu - Indha Kettavanai Nallavanenru Saatsi Solluthu Tholaikkaatsi Solluthu Vilambaratthaal Uyarndhavarkal Illaiyendrathu Yaarataa - Verum Vilambaratthaal Poyyaikkooda Meyyaakkuraanataa Athu Unmaithaanataa Poyyotu Mey Kalanthu Kaasu Saerkkiraan - Svis Paengkil Saerkkiraan 2. Kaasu Panam Perutthavanthaan Thalaivanaaga Mutiyuthu - Thaanai Kalvi Karru Vaangkina Pattam Kaarril Parakkuthu Pana Kaarril Parakkuthu Kooti Vaazhnthaal Koti Nanmai Enru Sonnathu Yaarataa - Theru Kotiyilae Ninraalum Kooda Yaarataa Unkooda Varuvathaarataa Kaadharundha Oosikooda Varuvathaedhataa Unkooda Varuvathaedhataa Ennataa Ulakamithu Nillataa Thalainimirnthu Kaalamithu Thavaritaamal Yesuvidam Mananthirumpu - 2