பாடல் #35600
நீயே தெய்வம் நீயே
🔤 Neeyae Theyvam Neeyae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீயே தெய்வம் நீயே - எனக்குள் இருப்பதும் நீயே 1. பூவுக்குள் காயாய் மறைந்தாய் மலருக்குள் காயாய் மறைந்தாய் காய் கணிந்து பழமாய் இனித்தாய் - பழம் புசித்தவர் பசியினை தணித்தாய்- உந்தன் பதமதை பணிந்தேன் இறைவா 2. நிலத்துக்குள் நீராய் ஒளிந்தாய் - கடல் நீருக்குள் உப்பா (க) ய் கரைந்தாய் கண்ணுக்குள் மணியாய் ஒளிர்ந்தாய் - உனை காண அக்கண்கள் திறந்தாய் 3. உடலுக்குள் உயிராய் உறைந்தாய் - உடல் ஏக்கத்தின் உயிர்வினை உரைத்தாய் உடலெனும் படகினை வாழ்வில் - பலர் பயன்பட இயங்கிட வைப்பாய் 4. என்னுள்ளே உன்னையும் வைத்தாய் - இந்த உண்மையை உணர்ந்திட செய்தாய் மனம் தளர்ந்தழுதிடும்போது - மன ஊக்கமெனும் மருந்தாய் ஆனாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeyae Theyvam Neeyae - Enakkul Iruppathum Neeyae 1. Poovukkul Kaayaay Marainthaay Malarukkul Kaayaay Marainthaay Kaay Kaninthu Pazhamaay Initthaay - Pazham Pusitthavar Pasiyinai Thanitthaay- Undhan Pathamathai Paninthaen Iraivaa 2. Nilatthukkul Neeraay Olinthaay - Katal Neerukkul Uppaa (ka) Y Karainthaay Kannukkul Maniyaay Olirnthaay - Unai Kaana Akkankal Thiranthaay 3. Udalukkul Uyiraay Urainthaay - Udal Aekkatthin Uyirvinai Uraitthaay Udalenum Patakinai Vaazhvil - Palar Payanbata Iyangkida Vaippaay 4. Ennullae Unnaiyum Vaitthaay - Indha Unmaiyai Unarnthida Seythaay Manam Thalarndhazhuthitumpothu - Mana Ookkamenum Marunthaay Aanaay