பாடல் #35599
ஒருமுறை வருவீரோ ஸ்வாமி
🔤 Orumurai Varuveero Svaami
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருமுறை வருவீரோ ஸ்வாமி - மீண்டும் கையிலொரு சவுக்கெடுத்து திருச்சபை சுத்திகரிக்க மறுமுறை வருவீரோ ஸ்வாமி - மீண்டும் 1. விற்பனையும் கொள்முறையும் வாழ்க்கையின் விதியாச்சே காசுகாரர் பலகை பொருள் சேர்க்கும் வழியாச்சே புறாவிற்கும் பரிசுத்தவான்கள் ஆசனத்தில் அமர்ந்தாச்சே ஐயகோ எம் ஆண்டவர் கண்கள் கண்ணீரால் நிறைந்துபோச்சே 2. நோவாவின் பேழைக்குள்ளே நோய்கிருமி நுழைஞ்சி போச்சே சோதோம் கொமோரா சிலர் சொர்க்கமாக மாறிப்போச்சே ஆபிரகாம் அந்தபுரம் இப்போ ஆகாரின் அரசாட்சி தாவீதின் உப்பரிகையோ அப்சலோமால் மாறிப்போச்சே 3. அற்புதங்கள் அதிசயங்கள் ஊழியர்க்கு அவசியமாச்சு ஆண்டவர் தந்த வேத வசனம் அற்புதங்களில் அமுங்கி போச்சு யூதாசின் பணப்பை இப்போ ரொம் ரொம்ப பெரிசாச்சு -இன்று சிலுவையின் உபதேசம் பயித்தியமாய் மாறிப்போச்சு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orumurai Varuveero Svaami - Meentum Kaiyiloru Savukketutthu Thirucchapai Sutthigarikka Marumurai Varuveero Svaami - Meentum 1. Virpanaiyum Kolmuraiyum Vaazhkkaiyin Vithiyaachsae Kaasukaarar Palakai Porul Saerkkum Vazhiyaachsae Puraavirkum Parisutthavaankal Aasanatthil Amarnthaachsae Aiyako Em Aandavar Kankal Kanneeraal Nirainthupochsae 2. Novaavin Paezhaikkullae Noykirumi Nuzhainjsi Pochsae Sothom Komoraa Silar Sorkkamaaga Maarippochsae Aapirakaam Andhapuram Ippo Aakaarin Arasaatsi Thaaveethin Upparikaiyo Apsalomaal Maarippochsae 3. Arpudhanggal Athisayanggal Oozhiyarkku Avasiyamaachsu Aandavar Thandha Vaedha Vasanam Arpudhanggalil Amungki Pochsu Yoothaasin Panappai Ippo Rom Romba Perisaachsu -inru Siluvaiyin Ubathaesam Payitthiyamaay Maarippochsu