பாடல் #35597
இல்லையென்றால் இயேசு
🔤 Illaiyenraal Yesu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இல்லையென்றால் - இயேசு இல்லையென்றால் நானில்லையே - என்னில் ஒன்றுமில்லையே - இல்லை 1. மாமிசமானதோர் வார்த்தையிவர் - தேவ ஆவியினால் எமை நிறைக்கின்றவர் பாவியென் பாதகம் யாவையும் தீர்த்திட ஆணிகள் பாய்ந்திட சிலுவையில் மாண்டவர் நினைத்து நினைத்து மனதில் களித்து துதித்து துதித்து கரங்கள் குவித்து பாடுவேன் துதி பாடுவேன் - இல்லை 2. மானிடர் பாவம் தீர்த்திடவே - மூன்று ஆணிகள் பாய்ந்திட குருசினிலே நானிலத்தோர் உயர் வானிலம் சேர்ந்திட மானிடனாகி எம் மாபழிதீர்த்ததை - நினைத்து 3. ஒரு முறை உலகினை மீட்கவே வந்தவர் அதிசயம் அற்புதம் ஆற்றிய ஆண்டவர் மறுமுறை வருவார் வானத்தின் வழியே நியாயங்கள் தீர்த்திட தூதருடன் வருவதை - நினைத்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Illaiyenraal - Yesu Illaiyenraal Naanillaiyae - Ennil Onrumillaiyae - Illai 1. Maamisamaanathor Vaartthaiyivar - Thaeva Aaviyinaal Emai Niraikkindravar Paaviyen Paadhakam Yaavaiyum Theertthida Aanigal Paaynthida Siluvaiyil Maandavar Ninaitthu Ninaitthu Manathil Kalitthu Thuthitthu Thuthitthu Karanggal Kuvitthu Paatuvaen Thuthi Paatuvaen - Illai 2. Maanidar Paavam Theertthidavae - Moonru Aanigal Paaynthida Kurusinilae Naanilatthor Uyar Vaanilam Saernthida Maanidanaaki Em Maabazhitheertthathai - Ninaitthu 3. Oru Murai Ulakinai Meetkavae Vandhavar Athisayam Arpudham Aarriya Aandavar Marumurai Varuvaar Vaanatthin Vazhiyae Niyaayanggal Theertthida Thoodharudan Varuvathai - Ninaitthu