பாடல் #35595
தத்தி தத்தி நடந்து
🔤 Thatthi Thatthi Natanthu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தத்தி தத்தி நடந்து வரும் சிங்கார மழலை - நீ திக்கி திக்கி பேசும் உந்தன் கொஞ்சுமொழி குரலை கேட்க கேட்க செவிகளிரண்டும் தேனை குடிக்குது உன்னைப்போல மாறவே எந்தன் உள்ளம் துடிக்குது உன்னைக் கட்டி பிடித்தொரு முத்தம் கொடுத்திட இதழ்கள் துடிக்குது - கண்ணே நீ பேசும் மழலை மொழியில் நூறு கவிதை தெரியுது சில மனிதர் பேசும் வார்த்தையினால் ஊரே எரியுது - தேவ கிருபை நிறைந்த வார்த்தையில் மன காயம் ஆறுது-நீ சாதி சமயம் வேதம் படிக்க ஆசீர்வாதம் பெருகுது கண்ணே சமய பேதம் உனக்கு தெரிவதில்லையே - இது ஞானிகட்கும் மேதைகட்கும் புரிவதில்லையே - உந்தன் கள்ளமில்லாத வெள்ளை சிரிப்புக்கு ஈடு இல்லையே - மன தெளிவில்லாத தீய மனிதர் நிலைப்பதில்லையே கண்ணே தொலைக்காட்சி தொடர்கள் நீ விலக்கவேண்டுமே தேவனை துதிப்பதுபோல் பாடங்களையும் படிக்க வேண்டுமே நம் இயேசுவைப்போல பெற்றவர்க்கு கீழ்படியவேண்டுமே-மனத் தெளிவுடன் இந்த உலகை எதிர்த்து நடக்கவேண்டுமே கண்ணே வேஷம் போடும் மனிதர் மாயம் அழியவேண்டுமே - வேத வசனம் விட்டுவிலகும் மனிதர் அகலவேண்டுமே - வழி விலகிடாது சிலுவை பாதை நடக்கவேண்டுமே - தூய ஆவி தேவமைந்தன் உன்னை நடத்தவேண்டுமே கண்ணே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thatthi Thatthi Natanthu Varum Singkaara Mazhalai - Nee Thikki Thikki Paesum Undhan Konjsumozhi Kuralai Kaetka Kaetka Sevigalirantum Thaenai Kutikkuthu Unnaippola Maaravae Endhan Ullam Thutikkuthu Unnaik Katti Pititthoru Muttham Kotutthida Idhazhkal Thutikkuthu - Kannae Nee Paesum Mazhalai Mozhiyil Nooru Kavithai Theriyuthu Sila Manidhar Paesum Vaartthaiyinaal Oorae Eriyuthu - Thaeva Kirupai Niraindha Vaartthaiyil Mana Kaayam Aaruthu-nee Saathi Samayam Vaedham Patikka Aaseervaadham Perukuthu Kannae Samaya Paedham Unakku Therivathillaiyae - Ithu Njaanigatkum Maethaigatkum Purivathillaiyae - Undhan Kallamillaadha Vellai Sirippukku Eetu Illaiyae - Mana Thelivillaadha Theeya Manidhar Nilaippathillaiyae Kannae Tholaikkaatsi Thodarkal Nee Vilakkavaentumae Devanai Thuthippathupol Paadanggalaiyum Patikka Vaentumae Nam Yesuvaippola Pertravarkku Keezhpatiyavaentumae-manath Thelivudan Indha Ulakai Ethirtthu Natakkavaentumae Kannae Vaesham Potum Manidhar Maayam Azhiyavaentumae - Vaedha Vasanam Vittuvilakum Manidhar Agalavaentumae - Vazhi Vilakitaathu Siluvai Paathai Natakkavaentumae - Thooya Aavi Thaevamaindhan Unnai Natatthavaentumae Kannae