பாடல் #35594
புத்தியுள்ள மனைவி
🔤 Putthiyulla Manaivi
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தியுள்ள மனைவி - தன் வீட்டை கட்டுகிறாள் புத்தியில்லாத பெண்மணி - அதை இடித்துப் போடுகிறாள் - கைகளால் இடித்துப் போடுகிறாள் - முழுவதும் புகழப்படும் பெண்மணி இவளோ - குலம் தழைக்க வந்த கண்மணி இவளா 1. அதிகாலை எழுந்து விடுகிறாள் - தன் வீட்டார்க்கு ஆகாரம் வழங்கி மகிழ்கிறாள் வீட்டு வேலைக்காரருக்கும் படியளக்கும் பெண்மணி புருஷன் இதயம் நம்பும் கண்மனி 2. எளியவருக்கு கைகள் திறக்கிறாள் - என்றும் ஏழைகட்கு உதவிடவே கரங்கள் நீட்டுகிறாள் வயல்வெளிகள் வாங்குவாள் திராட்சை தோட்டம் நாட்டுவாள்- தன் கைகளை பெலப்படுத்தி கொள்ளுகிறாள் 3. ஆடைகள் பலம் அலங்காரமே - வருங் காலம் குறித்து அவளுக்கென்றும் கவலையில்லையே ஞானம் விளங்க வாய்திறப்பாள் நாகரீகம் காத்திடுவாள் இவள் விளக்கு அணைவதில்லையே 4. வீட்டோரம் கனிதரும் கொடியே - என்றும் சீயோனின் ஆசீர்வாதம் தொடரும் உன்னையே ஒலிவமர கன்றுகளாம் பந்தியை சுற்றியுன் பிள்ளைகளுக்கு எருசலேமின் வாழ்வு நிச்சயமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Putthiyulla Manaivi - Than Veettai Kattukiraal Putthiyillaadha Penmani - Athai Ititthup Potukiraal - Kaigalaal Ititthup Potukiraal - Muzhuvathum Pugazhappatum Penmani Ivalo - Kulam Thazhaikka Vandha Kanmani Ivalaa 1. Athikaalai Ezhunthu Vitukiraal - Than Veettaarkku Aakaaram Vazhangki Makizhkiraal Veettu Vaelaikkaararukkum Patiyalakkum Penmani Purushan Idhayam Nampum Kanmani 2. Eliyavarukku Kaigal Thirakkiraal - Enrum Aezhaigatku Udhavidavae Karanggal Neettukiraal Vayalveligal Vaangkuvaal Thiraatsai Thottam Naattuvaal- Than Kaigalai Pelappatutthi Kollukiraal 3. Aataigal Palam Alangkaaramae - Varung Kaalam Kuritthu Avalukkenrum Kavalaiyillaiyae Njaanam Vilangga Vaaythirappaal Naagareegam Kaatthituvaal Ival Vilakku Anaivathillaiyae 4. Veettoram Kanidharum Kotiyae - Enrum Seeyonin Aaseervaadham Thodarum Unnaiyae Olivamara Kanrugalaam Panthiyai Surriyun Pillaigalukku Erusalaemin Vaazhvu Nicchayamae