பாடல் #35589
எதற்கும் கலங்காத
🔤 Edharkum Kalangkaadha
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எதற்கும் கலங்காத உள்ளம் தாருமே உமக்குள் களி கூர்ந்து மகிழவேண்டுமே நினைக்கும் நேரமெல்லாம் துதிக்க வேண்டுமே - நான் படைக்கும் பலிகளை நீர் ஏற்கவேண்டுமே - எதற்கும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா 1. பறவை மிருகம் தாவரங்கள் கலங்குவதில்லை புல்லின் பூவும் அழகுக்காக ஏங்குவதில்லை படைத்தவரே போஷிப்பதால் பயப்படுவதில்லை நாளைய தினம் குறித்த கவலை அவைகளுக்கில்லை-அதை நினைப்பதுமில்லை எதற்கும் 2. காட்டு மலரை அலங்கரிக்கும் கர்த்தரின் கரங்கள் கெட்ட மனிதர் எமை அணைக்க தயங்கியதில்லை நேற்றும் இன்றும் என்றும் இயேசு மாறியதில்லை ஏற்றுக்கொண்டநாள் முதல் எமை மறந்தது இல்லை-கண் உறங்கினதில்லை 3. சிலுவை பாதை தொடர்ந்து நடக்க அஞ்சுவதில்லை மயக்கும் மாம்ச சிந்தை என்னை மிஞ்சுவதில்லை கிறிஸ்துவுக்குள் இருப்பதினால் சாத்தான் தொடுவதில்லை இனிக்கும் வேத வார்த்தையை நான் மறப்பதுமில்லை-யாரும் மறுப்பதுமில்லை 4. வருகை நாளுக்காயத்தமாய் இருப்பதினாலே - எனை பரிசுத்தமாய் தூய ஆவி காப்பதினாலே - பிர தான தூதன் எக்காளம் தொனி ஒலித்திடும் வேளை சிங்காசம் அமர்ந்தவரின் அருகினில் இருப்போம் என்றும் அவருடன் அமர்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Edharkum Kalangkaadha Ullam Thaarumae Umakkul Kali Koornthu Makizhavaentumae Ninaikkum Naeramellaam Thuthikka Vaentumae - Naan Pataikkum Paligalai Neer Aerkavaentumae - Edharkum Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen Allaelooyaa 1. Paravai Mirugam Thaavaranggal Kalangkuvathillai Pullin Poovum Azhakukkaaga Aengkuvathillai Pataitthavarae Poshippathaal Payappatuvathillai Naalaiya Thinam Kurittha Kavalai Avaigalukkillai-athai Ninaippathumillai Edharkum 2. Kaattu Malarai Alanggarikkum Karttharin Karanggal Ketta Manidhar Emai Anaikka Thayangkiyathillai Naerrum Inrum Enrum Yesu Maariyathillai Aerrukkondanaal Mudhal Emai Marandhathu Illai-kan Urangkinathillai 3. Siluvai Paathai Thodarnthu Natakka Anjsuvathillai Mayakkum Maamsa Sinthai Ennai Minjsuvathillai Kiristhuvukkul Iruppathinaal Saatthaan Thotuvathillai Inikkum Vaedha Vaartthaiyai Naan Marappathumillai-yaarum Maruppathumillai 4. Varukai Naalukkaayatthamaay Iruppathinaalae - Enai Parisutthamaay Thooya Aavi Kaappathinaalae - Pira Thaana Thoodhan Ekkaalam Thoni Olitthitum Vaelai Singkaasam Amarndhavarin Arukinil Iruppom Enrum Avarudan Amarvom