பாடல் #35588
உலகம் ஒரு நாடகமேடை
🔤 Ulakam Oru Naadakamaetai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகம் ஒரு நாடகமேடை - அதில் நடமாடும் கல்லறை நான் நரகம் - நான் ஏன் செல்லவேண்டும் - அது சாத்தானின் இடமல்லவா பாவம் சாபம் யாவும் நீக்கும் - இயேசு சிந்திய கல்வாரி இரத்தம் - உலகம் 1. அதிகாலையில் மலரும் - அந்தி மாலையில் உதிர்ந்துவிடும் மலர் போன்ற ஒருநாளின் வாழ்வு சதமில்லை நிலையில்லை இகமீதிலே கொஞ்ச காலம் தோன்றி மறையும் புகையைப் போல காற்றினில் கரைந்துவிடும் - குளிர் 2. புல்லின் மேலமர்ந்து - மின்னும் பனித்துளி போலிருந்தும் இளங்காலை கதிர் வீசக் கண்டு உருண்டோடும் கரைந்தோடும் புவி வாழ்விதே என்ன கொண்டு வந்தாய் என்ன கொண்டு செல்வாய் மன்னாகி மறைந்திடுவாய் 3. வாலிபமும் அழகும் - வெறும் மாயை அழிந்துவிடும் - இந்த நீர் மேலே குமிழ்போல தோன்றி நினைக்கும் முன் மறைந்திடும் நொடிப்பொழுதில் காற்றில் ஏற்றி வைத்து கையால் மறைக்கும் தீபம் ஒரு நொடி நிலைத்திடுமோ - இங்கு 4. நிரந்தர வாழ்வெனக்கு - தரும் நீதியின் சூரியன் நினைத்தாலும் துதித்தாலும் இன்பம் நிலைவாழ்வு நிஜமாகும் நம் இயேசுவில் நானே வழியும் வாய்மை வாழ்வே என்றவர் வழியில் நடந்திட நரகமில்லை - இனி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakam Oru Naadakamaetai - Athil Natamaatum Kallarai Naan Narakam - Naan Aen Sellavaentum - Athu Saatthaanin Idamallavaa Paavam Saabam Yaavum Neekkum - Yesu Sinthiya Kalvaari Rattham - Ulakam 1. Athikaalaiyil Malarum - Anthi Maalaiyil Uthirnthuvitum Malar Pondra Orunaalin Vaazhvu Sathamillai Nilaiyillai Igameethilae Konjja Kaalam Thonri Maraiyum Pukaiyaip Pola Kaarrinil Karainthuvitum - Kulir 2. Pullin Maelamarnthu - Minnum Panitthuli Polirunthum Ilangkaalai Kathir Veesak Kantu Uruntotum Karainthotum Puvi Vaazhvithae Enna Kontu Vanthaay Enna Kontu Selvaay Mannaaki Marainthituvaay 3. Vaalibamum Azhakum - Verum Maayai Azhinthuvitum - Indha Neer Maelae Kumizhpola Thonri Ninaikkum Mun Marainthitum Notippozhuthil Kaarril Aerri Vaitthu Kaiyaal Maraikkum Theebam Oru Noti Nilaitthitumo - Ingku 4. Nirandhara Vaazhvenakku - Tharum Neethiyin Sooriyan Ninaitthaalum Thuthitthaalum Inbam Nilaivaazhvu Nijamaakum Nam Yesuvil Naanae Vazhiyum Vaaymai Vaazhvae Endravar Vazhiyil Natanthida Narakamillai - Ini