பாடல் #35586
முடியாததொன்றும் இல்லை
🔤 Mutiyaadhathonrum Illai
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடியாததொன்றும் இல்லை என் வாழ்விலே துணையாகவே என்னோடென்றும் நீர் வரவேண்டுமே விசுவாசமே ஜெயமே உலகை வென்றிடுமே தூய ஆவியே தங்கிடுமே நிறைவாகவே என்னுள்ளமே எந்நாளுமே என்னுடனே 1.அடங்காத கடலலை அடங்கும் அவர் வார்த்தையில் சீறும் செங்கடல் இரண்டாய் பிரியும் அவர் சுவாசத்தில் பேசாத மிருகமும் பேசும் எனை சுமந்திடும் பானை மாவும் கலயத்தில் எண்ணெய் நெடுநாள் வரும் நன்மை கிருபை என்னைத் தொடரும் எதிலும் ஜெயமே எந்நாளுமே 2. விலகாத கிருபைகள் தொடரும் மலை விலகிடும் திறளான நன்மைகள் என்னையே தினம் தொடர்ந்திடும் புதிதான வரங்களும் வாழ்வும் எனில் விளங்கிடும் திருமைந்தன் கரங்கள் எனையே தினம் தாங்கிடும் எனது நிழலாய் இறைவன் இருக்க அசைவதேயில்லை எந்நாளும் 3. தீராத தாகம் தீர்க்கும் நீரோடையே கல்வாரி மலை மேலிருந்தே தினம் பாயுதே விலகாத பாவம் விரட்டும் என் இயேசுவே உமதன்பில் மூழ்கி தினமும் இளைப்பாருவேன் நித்திய வாழ்வு நித்திய மகிழ்ச்சி நிச்சயம் எனக்கே - அந்நாளில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutiyaadhathonrum Illai En Vaazhvilae Thunaiyaagavae Ennotenrum Neer Varavaentumae Visuvaasamae Jeyamae Ulakai Venritumae Thooya Aaviyae Thangkitumae Niraivaagavae Ennullamae Ennaalumae Ennudanae 1.adangkaadha Katalalai Adangkum Avar Vaartthaiyil Seerum Senggatal Irantaay Piriyum Avar Suvaasatthil Paesaadha Mirugamum Paesum Enai Sumanthitum Paanai Maavum Kalayatthil Enney Netunaal Varum Nanmai Kirupai Ennaith Thodarum Ethilum Jeyamae Ennaalumae 2. Vilakaadha Kirupaigal Thodarum Malai Vilakitum Thiralaana Nanmaigal Ennaiyae Thinam Thodarnthitum Puthithaana Varanggalum Vaazhvum Enil Vilangkitum Thirumaindhan Karanggal Enaiyae Thinam Thaangkitum Enathu Nizhalaay Iraivan Irukka Asaivathaeyillai Ennaalum 3. Theeraadha Thaagam Theerkkum Neerotaiyae Kalvaari Malai Maelirunthae Thinam Paayuthae Vilakaadha Paavam Virattum En Yesuvae Umathanpil Moozhki Thinamum Ilaippaaruvaen Nitthiya Vaazhvu Nitthiya Makizhchsi Nicchayam Enakkae - Annaalil