பாடல் #35584
அடிக்கடி மாறும் மனிதனின்
🔤 Atikkati Maarum Manidhanin
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடிக்கடி மாறும் மனிதனின் நிறம் - அது ஏனென்று தெரியாது ஒரு நாள் புகழ்வார் மறுநாள் இகழ்வார் காரணம் புரியாது சிரிப்பு வரும் சிரிப்பு வரும் - இந்த மனிதனை நினைத்தால் சிரிப்பு வரும் 1. சின்ன சின்ன கோபம் தீர்ந்துவிடும் வளரவிட்டால் பெருந்தீமை வரும் சொற்களின் மிகுதியில் பாவம் வரும் - அதை சுருக்கிவிட்டால் தேன் போல் இனிக்கும் விட்டுக் கொடுத்தால் கொஞ்சம் தட்டிக் கொடுத்தால் வெற்றியுடன் இன்பம் தொடர்ந்து வரும் - சிரிப்பு 2. அறுவடை காலத்தில் சேர்த்து வைக்கும் எறும்பையும் பார்த்தால் ஞானம் வரும் கை முடக்கி நீ உறங்கிவிட்டால் தரித்திரம் ஆயுதம் அணிந்துவரும் இன்னும் கொஞ்சம் உறங்கட்டும் என்றிருந்தால் சடுதியில் நாசம் நெருங்கிவரும் - சிரிப்பு 3. அகந்தையும் பெருமையும் அகற்றிடுவாய் ஐஸ்வர்யம் கனமும் அடைந்திடுவாய் உன் துரவில் ஊறிடும் ஜலம் குடிப்பாய் - உன் ஊற்றுகள் வீதியில் பாய்ந்துவரும் அதிகாலை அவரை (நீ) தேடிடவே எழுந்தால் அவர் முகம் கண்டிடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atikkati Maarum Manidhanin Niram - Athu Aenenru Theriyaathu Oru Naal Pugazhvaar Marunaal Igazhvaar Kaaranam Puriyaathu Sirippu Varum Sirippu Varum - Indha Manidhanai Ninaitthaal Sirippu Varum 1. Sinna Sinna Kobam Theernthuvitum Valaravittaal Peruntheemai Varum Sorkalin Mikuthiyil Paavam Varum - Athai Surukkivittaal Thaen Pol Inikkum Vittuk Kotutthaal Konjjam Thattik Kotutthaal Verriyudan Inbam Thodarnthu Varum - Sirippu 2. Aruvatai Kaalatthil Saertthu Vaikkum Erumpaiyum Paartthaal Njaanam Varum Kai Mudakki Nee Urangkivittaal Tharitthiram Aayudham Aninthuvarum Innum Konjjam Uranggattum Enrirunthaal Satuthiyil Naasam Nerungkivarum - Sirippu 3. Aganthaiyum Perumaiyum Agarrituvaay Aisvaryam Kanamum Atainthituvaay Un Thuravil Ooritum Jalam Kutippaay - Un Oorrugal Veethiyil Paaynthuvarum Athikaalai Avarai (nee) Thaetidavae Ezhunthaal Avar Mugam Kantituvaay