பாடல் #35581
தாமதமேன் தயாபரனே
🔤 Thaamathamaen Thayaabaranae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாமதமேன் தயாபரனே - உந்தன் பூமுகம் கானவே ஏங்குகிறேன் நித்தம் நித்தம் என்ன ஏய்த்தழித்திடும் உலகினை வெறுத்திடவே ஒத்து போகாதென் உடலை வீசி- என் றென்றும் உம்முடன் சேர்ந்து வாழ்ந்திட மனிதரின் வார்த்தையில் மனங்கசந்தேன் மறா உம் கிருபையில் மனமகிழ்ந்தேன் சேரா ஸ்நேகத்தால் நிலைகுலைந்தேன் மன்னரின் கரம் அணைக்க முகம் மலர்ந்தேன் அங்குமிங்குமலைப் பாய்ந்திடும் மனம் ஆறுதல் அடைந்திடவே யூதா ராஜ சிங்கம் வெண்சிங்காசனம் ராஜ ராஜனிவர் இராஜ்ஜியம் கானவே சிவந்த மனிதன் இவன் நிழல் வெளுப்போ - அந்த கருத்தவன் உதிரத்தின் நிறம் கருப்பு மனிதரில் பேதங்கள் மிகுந்திடல் கான மனம் பதறும் எந்தன் உடல் உதறும் தெய்வதிருமகன் சிந்திய உதிரம் காலில் மிதிபடுமோ எய்த அம்புகள் ஏந்தும் பொல்லாங்கன் வஞ்சகம் எந்தன் வாழ்வில் விலகிடுமோ கனியுண்ட பாவம் எமில் கழுவிடவே களங்கமெலாம் நீங்கி மகிழ்வுறவே பரமகுமாரன் எந்தன் ஜீவனன்றோ மரணமும் இனியெந்தன் இலாபமன்றோ வானில் தூதர் கணம் கூடி பாடிவர சிறகுகள் விரித்திடுவேன் பாவமேனியிதை வீசியெறிந்து மறு ரூப மேனியை அழகுற அணிந்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaamathamaen Thayaabaranae - Undhan Poomugam Kaanavae Aengkukiraen Nittham Nittham Enna Aeytthazhitthitum Ulakinai Verutthidavae Otthu Pokaathen Udalai Veesi- En Renrum Ummudan Saernthu Vaazhnthida Manidharin Vaartthaiyil Mananggasanthaen Maraa Um Kirupaiyil Manamakizhnthaen Saeraa Snaegatthaal Nilaikulainthaen Mannarin Karam Anaikka Mugam Malarnthaen Angkumingkumalaip Paaynthitum Manam Aarudhal Atainthidavae Yoothaa Raaja Singgam Vensingkaasanam Raaja Raajanivar Iraajjiyam Kaanavae Sivandha Manidhan Ivan Nizhal Veluppo - Andha Karutthavan Uthiratthin Niram Karuppu Manidharil Paedhanggal Mikunthidal Kaana Manam Patharum Endhan Udal Udharum Theyvathirumakan Sinthiya Uthiram Kaalil Mithibatumo Eytha Ampugal Aenthum Pollaanggan Vanjjakam Endhan Vaazhvil Vilakitumo Kaniyunda Paavam Emil Kazhuvidavae Kalanggamelaam Neengki Makizhvuravae Paramakumaaran Endhan Jeevananro Maranamum Iniyendhan Ilaabamanro Vaanil Thoodhar Kanam Kooti Paativara Sirakugal Viritthituvaen Paavamaeniyithai Veesiyerinthu Maru Rooba Maeniyai Azhakura Aninthidavae