பாடல் #35580
கடைசி காலம் இது
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
கடைசி காலம் இது கவனம் வேண்டும் நண்பா கண்ணாமூச்சு காட்டி கழுத்தறுக்கும் கூட்டம் எதுவென்று கண்டுபிடி நண்பா இயேசுவுக்காய் மரித்திட ஆயத்தமா - பர லோகத்திலே - பலன் பெருவாய் நீ நிச்சயமா தாவீதைப்போல நடனமாடுவோர் தடுமாறும் காலமிது - நான் செத்தாலும் சாவேன் எஸ்தரை போலவே என் ஜனம் மீட்புறவே இது சாவைக்கண்டு அஞ்சாத கூட்டம் சரித்திரம் படைத்திட துடிக்கும் - நம் இயேசுவைப் போல சிலுவை சுமக்கும் சீயோனின் சிங்காரத் தோட்டம் இளையோர் முதியோர் ஆண் பெண் யாருக்கும் இனி வரும் பலன் மேல் நோக்கம் - இந்த உலகத்தை வெறுப்போம் உபத்திரவம் சகிப்போம் இடுக்கமான வழி நடப்போம்