பாடல் #35575
வேத வாக்கியமே
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
வேத வாக்கியமே நமது பாக்கியமே ஊனை கனுக்களை இதய நினைவை வகையாய் பிரித்திடும் - என் ஆத்துமா ஆவியை நிறைத்திடுமே 1. இருபுறம் கருக்குள்ள எந்த பட்டயம் அதிலும் கருக்குள்ளது உந்தன் வசனம் ஜீவன் கொடுக்கும் வல்லமையளிக்கும் ஆறுதல் படுத்தும் மெய் வழியில் என்னை வழி நடத்தும் தூய ஆவியால் என்னை பெலப்படுத்தும் 2. பரதேசியாய் தங்கும் வீட்டினிலே உமது பிரமாணம் என் சங்கீதமே உமது கற்பனை என் மனமகிழ்ச்சி தினமும் தியானிக்கிறேன் - உம் வேதம் மனதில் காத்துக்கொள்வேன் - எக்காலம் உம் வாக்கின் வழி நடப்பேன் 3. நீர் தந்த அபிஷேகம் நிலைத்திருக்க வேறொரு போதகம் எமக்கில்லையே அந்த அபிஷேகம் யாவையும் போதிக்கும் சிலுவை வழி நடப்போம் - உம் வாக்கில் என்றும் நிலைத்திருப்போம் - உம் பாதம் பணிந்து போற்றிடுவோம் 4. உலகம் அதின் இச்சைகள் ஒழிந்திடுமே உமது வார்த்தைகள் ஒழிவதில்லை வானம் பூமி ஒழிந்த போதும் அழியா வசனங்களில் - நானும் நடந்து நிலைத்திருப்பேன் - பொல்லாங்கனை எதிர்த்து ஜெயித்திடுவேன்