பாடல் #35574
நீதிமானின் கூடாரத்தில்
🔤 Neethimaanin Kootaaratthil
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீதிமானின் கூடாரத்தில் கெம்பீர சத்தம் யாக்கோபின் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் தம்புரு கிண்ணரம் வீணை யோடு துதிகள் ஆயிரம் - நான் துதிக்கும் நாவு எழுப்பிடுதே இனிய சங்கீதம் - நீதி 1. பறவை பாடுதே நீ பாட கூடாதா - அந்த இயற்கை துதிக்குதே நாம் துதிக்க கூடாதா - நம் பாடு மரணம் ஏற்க இயேசு பிறந்ததினாலே - நம் பாவமெல்லாம் பறந்து போச்சு பாடிடுவோமே - நீத 2. நோய்கள் பேய்கள் வேதனைகள் உனக்கு ஏனம்மா - எங்கள் இயேசு நாதர் சுகங்கொடுப்பார் உனக்கு தெரியுமா - நம் இயேசு கூட இருக்கும் போது கவலை ஏனம்மா - அவர் கரம் பிடித்து நடக்கும் போது கலக்கம் வீணம்மா -நீதி 3. புதிய வல்லமை புதிய கிருபை எனக்கு வேண்டுமே அதை கொடுக்கும் தேவ தேவனை நான் துதிக்கவேண்டுமே புதிய நன்மை தினமும் என்னை தொடரவேண்டுமே ஜீவனிருக்கும் வரையில் உமது வீட்டில் நிலைக்கவேண்டுமே நீதி 4. ஆடிப்பாடுவேன் கூடி நடனமாடுவேன் - என்னை தேடிவந்த தேவனையே போற்றிபாடுவேன் தாளத்தோடும் மேளத்தோடும் கீதம்பாடுவேன் எக்காளம் ஊதி எரிகோ மதிலை இடித்து போடுவேன் - நீதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neethimaanin Kootaaratthil Kempeera Sattham Yaakkopin Devanukku Koti Sthotthiram Thampuru Kinnaram Veenai Yotu Thuthigal Aayiram - Naan Thuthikkum Naavu Ezhuppituthae Iniya Sangkeedham - Neethi 1. Paravai Paatuthae Nee Paada Kootaathaa - Andha Iyarkai Thuthikkuthae Naam Thuthikka Kootaathaa - Nam Paatu Maranam Aerka Yesu Pirandhathinaalae - Nam Paavamellaam Paranthu Pochsu Paatituvomae - Needha 2. Noykal Paeykal Vaedhanaigal Unakku Aenammaa - Enggal Yesu Naadhar Sugangkotuppaar Unakku Theriyumaa - Nam Yesu Kooda Irukkum Pothu Kavalai Aenammaa - Avar Karam Pititthu Natakkum Pothu Kalakkam Veenammaa -neethi 3. Puthiya Vallamai Puthiya Kirupai Enakku Vaentumae Athai Kotukkum Thaeva Devanai Naan Thuthikkavaentumae Puthiya Nanmai Thinamum Ennai Thodaravaentumae Jeevanirukkum Varaiyil Umathu Veettil Nilaikkavaentumae Neethi 4. Aatippaatuvaen Kooti Natanamaatuvaen - Ennai Thaetivandha Devanaiyae Porripaatuvaen Thaalatthotum Maelatthotum Keedhampaatuvaen Ekkaalam Oothi Eriko Mathilai Ititthu Potuvaen - Neethi