பாடல் #35573
உம்மோடு இருக்க வேணுமே
🔤 Ummotu Irukka Vaenumae
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு இருக்க வேணுமே - உங்க உங்க அன்பை அள்ளி பருக வேணுமே விடுதலை தந்தவரே புது பெலன் ஈந்தவரே உமது பாதம் அமரவேண்டுமே - தினம் தினம் - நான் உமது வார்த்தை கேட்க வேண்டுமே 1. பாவம் செய்த கண்களுக்கு நித்திரையும் தூரமாச்சி பாவி எந்தன் வசிப்பிடமாய் கல்லறை தான் மாறிடுச்சி நம்பிக்கையின் நங்கூரமே நம்பி உம்மை தொடர்ந்திடவே உமது கண்களில் தயவு வேண்டுமே - அநுதினம் என்னை நன்மை கிருபை தொடர வேண்டுமே - உம்மோடு 2. என் இதய ஏக்கமெல்லாம் அறிந்தவர் யாருமில்லை என் மனதின் பாரங்களை புரிந்தவர் எவருமில்லை கருவினில் தெரிந்தவரே கரங்களில் வரைந்தவரே உமது பாதை தொடர வேண்டுமே - என் காலமெல்லாம் உமது வார்த்தை எனது பாடமே - உம்மோடு 3. வெண்ணிலவு நட்சத்திரங்கள் வான தூதர் சேனையெல்லாம் வானில் நீங்கள் வரும்பொழுது எங்களுக்கும் வழி கொடுக்கும் வியாசர் எந்தன் (மானிடர் எம்) பாடலுக்கு வானதூதர் இசையமைக்க ஆரவார முழக்கம் கேட்குமே - வெகு சீக்கிரம் அந்த நாளைக் காண ஆவல் பெருகுதே - உம்மோடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Irukka Vaenumae - Ungga Ungga Anpai Alli Paruga Vaenumae Vitudhalai Thandhavarae Puthu Pelan Eendhavarae Umathu Paadham Amaravaentumae - Thinam Thinam - Naan Umathu Vaartthai Kaetka Vaentumae 1. Paavam Seytha Kankalukku Nitthiraiyum Thooramaachsi Paavi Endhan Vasippidamaay Kallarai Thaan Maarituchsi Nampikkaiyin Nangkooramae Nampi Ummai Thodarnthidavae Umathu Kankalil Thayavu Vaentumae - Anuthinam Ennai Nanmai Kirupai Thodara Vaentumae - Ummotu 2. En Idhaya Aekkamellaam Arindhavar Yaarumillai En Manathin Paaranggalai Purindhavar Evarumillai Karuvinil Therindhavarae Karanggalil Varaindhavarae Umathu Paathai Thodara Vaentumae - En Kaalamellaam Umathu Vaartthai Enathu Paadamae - Ummotu 3. Vennilavu Natsatthiranggal Vaana Thoodhar Saenaiyellaam Vaanil Neenggal Varumpozhuthu Enggalukkum Vazhi Kotukkum Viyaasar Endhan (maanidar Em) Paadalukku Vaanathoodhar Isaiyamaikka Aaravaara Muzhakkam Kaetkumae - Veku Seekkiram Andha Naalaik Kaana Aaval Perukuthae - Ummotu