பாடல் #35571
ஓடி வாங்க ஓடி வாங்க
🔤 Oti Vaangga Oti Vaangga
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓடி வாங்க ஓடி வாங்க ஓடிவாங்கையா - நம்மை தேடி வந்த தெய்வம் பொறந்த செய்தி கேளய்யா முன்னனையில் தாய் மடியில் மன்னவரும் இருந்த காட்சி கண்ணீரும் கவலை தீர்க்கும் மருந்தாகும் உண்மை சாட்சி 1. பாடுபட்டு சேத்த செல்வம் பொத்தலான பையில போட்டு வீனாகி போனதாலே சோகமாகி போன புள்ள பட்டு போன மரத்தைப் போல சுத்தங்கெட்டு போனபின்னே சுத்தமாக்கும் தெய்வம் இப்போ பெத்தலையில் பொறந்துட்டாரு 2. மாடு மனை வீடு எல்லாம் மச்சு கூடகோபுரமெல்லாம் பட்டம் பரிவட்டம் பதவி பறிபோச்சு பாவி மனுஷா திட்டம் போட்டு ஏய்த்திடுவார் தட்டு தடுமாறிடுவாய் ஏற்றுக்கொண்டால் வாழ்வளிப்பார் முன்னனையில் கிடந்த தெய்வம் 3. வாழும் போது கூடவரும் சொந்தபந்தம் சேர்ந்து விடும் பட்ட காலில் பட்டா போதும் விட்டு விட்டு ஓடிவிடும் தான தர்மம் பூஜை படையல் நீக்கிடாது நம்ம சாபம் வானம் விட்டு பூமி வந்தவர் தந்திடுவார் சமாதானம் - அந்த 4. சாதி சனம் விலகட்டுமே ஊருலகம் ஒதுக்கட்டுமே சாகும்வரை கூடவருவார் சாமி இயேசு நாதருங்க ஞானியர்கள் மேய்ப்பரெல்லாம் பார்த்து பணிந்த தெய்வம் நாமும் சேர்ந்து வணங்கிடலாம் சீக்கிரமா ஓடி வாங்க - ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oti Vaangga Oti Vaangga Otivaangkaiyaa - Nammai Thaeti Vandha Theyvam Porandha Seythi Kaelayyaa Munnanaiyil Thaay Matiyil Mannavarum Irundha Kaatsi Kanneerum Kavalai Theerkkum Marunthaakum Unmai Saatsi 1. Paatubattu Saettha Selvam Potthalaana Paiyila Pottu Veenaaki Ponathaalae Sogamaaki Pona Pulla Pattu Pona Maratthaip Pola Sutthangkettu Ponapinnae Sutthamaakkum Theyvam Ippo Petthalaiyil Poranthuttaaru 2. Maatu Manai Veetu Ellaam Machsu Koodakopuramellaam Pattam Parivattam Pathavi Paripochsu Paavi Manushaa Thittam Pottu Aeytthituvaar Thattu Thatumaarituvaay Aerrukkontaal Vaazhvalippaar Munnanaiyil Kidandha Theyvam 3. Vaazhum Pothu Koodavarum Sondhapandham Saernthu Vitum Patta Kaalil Pattaa Pothum Vittu Vittu Otivitum Thaana Tharmam Poojai Pataiyal Neekkitaathu Namma Saabam Vaanam Vittu Poomi Vandhavar Thanthituvaar Samaathaanam - Andha 4. Saathi Sanam Vilakattumae Oorulakam Othukkattumae Saakumvarai Koodavaruvaar Saami Yesu Naadharungga Njaaniyarkal Maeypparellaam Paartthu Panindha Theyvam Naamum Saernthu Vanangkidalaam Seekkiramaa Oti Vaangga - Aiyaa