பாடல் #3557
மனம் காசிந்தேயொரு
🔤 Manam Kaasinthaeyoru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் கசிந்தேயொரு ஜெபம் செய்யும்போது-தன் ஆவியினால் கர்த்தர் உனை நிரப்புவாரு மனம் திரும்பியே நீயும் மன்றாடியே கேளு-உன் மனக்குறை யாவுமே தீர்த்து வைப்பாரு இனம் தெரியாத நோய் எது வந்தபோதும்-அதை குணமாக்கும் என்று கர்த்தரையே கேளு உடன் தருவார் சுகம் இயேசுவே எனப் பாடு உண்மை அன்பை நீயும் சிலுவையிலே பாரு பணம் பொருள் பதவி உந்தன் கூடவராது-பாவச் சுமையினில் எமை மீட்க வந்தது யாரு கன்மலையே என்னைக் காத்திடும் எனப்பாடு கண்ணீரோடொரு ஜெபம் செய்து கேளு நொருங்குண்ட இதயத்தின் குறைகள் கேட்பாரு-ஆவியில் எளிமைகொண்டே அடைக்கலம் கேளு கலங்கும் உன் மனதுக்கு களிப்பூட்டுவாரு-அந்த இரக்கத்தின் தேவனை நீ ருசித்தே பாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Kasinthaeyoru Jebam Seyyumpothu-than Aaviyinaal Kartthar Unai Nirappuvaaru Manam Thirumpiyae Neeyum Manraatiyae Kaelu-un Manakkurai Yaavumae Theertthu Vaippaaru Inam Theriyaadha Noy Ethu Vandhapothum-athai Kunamaakkum Enru Karttharaiyae Kaelu Udan Tharuvaar Sugam Yesuvae Enap Paatu Unmai Anpai Neeyum Siluvaiyilae Paaru Panam Porul Pathavi Undhan Koodavaraathu-paavach Sumaiyinil Emai Meetka Vandhathu Yaaru Kanmalaiyae Ennaik Kaatthitum Enappaatu Kanneerotoru Jebam Seythu Kaelu Norungkunda Idhayatthin Kuraigal Kaetpaaru-aaviyil Elimaikontae Ataikkalam Kaelu Kalangkum Un Manathukku Kalippoottuvaaru-andha Irakkatthin Devanai Nee Rusitthae Paaru