பாடல் #35569
வானில் ஒரு வெள்ளி
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
வானில் ஒரு வெள்ளி மின்னி சேதி சொல்ல மேசியாவை காண செல்லுவோம் ஆட்டிடையர் அன்றே அன்புடன் பணிந்தார் - நாம் ஆண்டவர் முகம் தரிசிப்போம் அல்லேலூயா Happy Happy Christmas கன்னிமரி பாலன் கண்ணீர் துடைப்பாரே என்னை தேவ பிள்ளையாக்குவார் யூதராஜ சிங்கம் பாவம் போக்கினாரே கீதம் பாடி கீர்த்தனம் செய்வோம் வானதூதர் பாடல் நீலவானில் எங்கும் மேகமீதில் எதிரொலிக்கும் பாவம் தீர்ந்து போக பாலன் பிறந்ததாலே மாந்தரில் பிரியம் ஓங்குமே அந்தகாரம் நீங்கும் அருனோதயம் என்றும் சொந்தம் என்று நம்மில் உதிக்கும் வந்த வினை நீக்க தன்னை தந்த தெய்வம் நல்ல தேவன் பாதம் பணிவோம்