பாடல் #35562
சீயோனின் எக்காளம்
🔤 Seeyonin Ekkaalam
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனின் எக்காளம் தொனித்திடுதே இயேசுவின் நற்செய்தி ஒலித்திடுதே பரிசுத்தமாவோம் பரவசமடைவோம் பரிசுத்தர் பாதங்கள் பணிந்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா வயல் நிலங்கள் கதிர் மணிகள் அறுவடைக்காய் காத்திருக்க புயல் வருமுன்னே புறப்படுவோம் புது புது கிருபைகள் அடைந்திடுவோம் - அல்லேலூயா நீதியின் ஆயுதம் அணிந்திடுவோம் அவர் பணியாற்றிட அணிவகுப்போம் எதிரியின் வியூகங்கள் முறியடிக்க பரிசுத்த ஆவியின் துணை பெறுவோம் - அல்லேலூயா செந்தமிழ் நாட்டின் தெருக்களிலே ஓடுங்கிய கிராமத்து குடிசையிலே ஒளியென இயேசுவின் திருவசனம் ஒளிர்ந்திட சேர்வோம் ஒருமுகமாய் - அல்லேலூயா காலம் இனி செல்லாதே தாமதம் நீ செய்வாயோ ஒரு நிமிடமும் இனி தாமதியோம் அவர் வருகை மிக நெருங்கிடுதே - அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonin Ekkaalam Thonitthituthae Yesuvin Narseythi Olitthituthae Parisutthamaavom Paravasamataivom Parisutthar Paadhanggal Paninthituvom Allaelooyaa Allaelooyaa Aamen Aamen Allaelooyaa Vayal Nilanggal Kathir Manigal Aruvataikkaay Kaatthirukka Puyal Varumunnae Purappatuvom Puthu Puthu Kirupaigal Atainthituvom - Allaelooyaa Neethiyin Aayudham Aninthituvom Avar Paniyaarrida Anivakuppom Ethiriyin Viyooganggal Muriyatikka Parisuttha Aaviyin Thunai Peruvom - Allaelooyaa Sendhamizh Naattin Therukkalilae Otungkiya Kiraamatthu Kutisaiyilae Oliyena Yesuvin Thiruvasanam Olirnthida Saervom Orumugamaay - Allaelooyaa Kaalam Ini Sellaathae Thaamatham Nee Seyvaayo Oru Nimidamum Ini Thaamathiyom Avar Varukai Miga Nerungkituthae - Allaelooyaa