பாடல் #35561
உம்மை அம்மா என்று
🔤 Ummai Ammaa Enru
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை அம்மா என்று கூப்பிடலாமா என் அப்பா என்றே அழைத்திடலாமா நல்ல அண்ணன் என்று சொல்லிடலாமா இனிய நண்பன் என்றே இதயம் நிறைந்து கூவிடலாமா அன்பு அத்தான் அத்தான் என்றே மணவாட்டியாக மாறி உம்மோடென்றும் வாழ்ந்திடலாமா 1. உம்மை அம்மா என்றே கூப்பிட பார்த்தேன் - என் அக்கிரமங்கள் தடுத்து நிற்குதையா - கெட்ட பிள்ளையான என்னை - நல்ல அன்னை போல் தேற்றிய - உம்மை அம்மா 2. உம்மை அப்பா என்றே அழைத்திட நினைத்தேன் - பாவ பார சுமை என்னை அழுத்துதையா - முழு பாவத்திலே கிடந்தேன் - தன் தோளிலேற்றி சுமந்ததினால் - அப்பா 3. உம்மை அண்ணன் என்று சொல்ல நினைத்தாலும் - உலக கவலை கண்ணீர் கண்ணை மறைக்குதையா - எனை மயக்கும் உலகை வெறுத்தே - உந்தன் வலது கரத்தை பிடித்தே - உம்மை அண்ணே 4. மணவாட்டியாக எனை மாற்றவே - தாய் வயிற்றில் தெரிந்து கொண்டீரே - எனை அழைத்து செல்ல வருவீர் - உந்த அழகு முகத்தை பார்த்தே அத்தான் என்றே கூப்பிடுவேனே மணவாட்டியாக மாறிடுவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Ammaa Enru Kooppidalaamaa En Appaa Enrae Azhaitthidalaamaa Nalla Annan Enru Sollidalaamaa Iniya Nanpan Enrae Idhayam Nirainthu Koovidalaamaa Anpu Atthaan Atthaan Enrae Manavaattiyaaga Maari Ummotenrum Vaazhnthidalaamaa 1. Ummai Ammaa Enrae Kooppida Paartthaen - En Akkiramanggal Thatutthu Nirkuthaiyaa - Ketta Pillaiyaana Ennai - Nalla Annai Pol Thaerriya - Ummai Ammaa 2. Ummai Appaa Enrae Azhaitthida Ninaitthaen - Paava Paara Sumai Ennai Azhutthuthaiyaa - Muzhu Paavatthilae Kidanthaen - Than Tholilaerri Sumandhathinaal - Appaa 3. Ummai Annan Enru Solla Ninaitthaalum - Ulaka Kavalai Kanneer Kannai Maraikkuthaiyaa - Enai Mayakkum Ulakai Verutthae - Undhan Valathu Karatthai Pititthae - Ummai Annae 4. Manavaattiyaaga Enai Maartravae - Thaay Vayirril Therinthu Konteerae - Enai Azhaitthu Sella Varuveer - Undha Azhaku Mugatthai Paartthae Atthaan Enrae Kooppituvaenae Manavaattiyaaga Maarituvaenae