பாடல் #35559
புழுதியில் அஸ்திபாரம்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
புழுதியில் அஸ்திபாரம் மண் வீட்டில் வாசம் பொட்டு பூச்சி அரிக்கும் புவி வாழ்வு நிலைக்கும் - மானிடனே நித்திய ஜீவன் பெற சத்திய வாழ்வடைய இன்றே இயேசுவண்டை வா புதிய வாழ்வு இனி தூய ஆவியினால் மகிழ்வுடன் துவங்கிடுவாய் - மானிடனே புசித்து குடித்து தன் உழைப்பின் பலன் பெறுதல் தேவ அனுக்கிரகமே கொஞ்சம் புசித்தாலும் அதிகம் புசித்தாலும் நித்திரை இன்பமன்றோ - உழைப்பவர்க்கு பாவத்தை மறைக்கிறவன் வாழ்வு பெறுவதில்லை பாவத்தின் சம்பளம் மரணம் அறிக்கை செய்து அவற்றை விலக்கி வாழ்பவருக்கு இரக்கங்கள் குறைவதில்லை - ஆண்டவரின் வசனம் கேளாது செவியை விலக்குபவன் விண்ணப்பங்கள் அருவருப்பு திருமறை வழியில் திருந்தி நடப்பவனோ விவேகமுள்ள மகன் - அவருக்கு