பாடல் #35557
நம்பி வந்தால் இயேசு
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
நம்பி வந்தால் இயேசு உன்னை தள்ளவே மாட்டார் நம்பினோரை காத்திடும் தேவன் உறங்கவே மாட்டார் ஞான கன்மலை நாயகன் இவரே தாகம் தீர்த்திடும் ஓடையும் இவரே காயம் ஆற்றிடும் ஒளஷதம் இவரே நோய்க்கும் பேய்க்கும் எதிரிடை இவரே மயக்கும் மாமிசம் ஜீவன பெருமை ஒழிக்க சிலுவை சுமந்தவரை நீ - நம்பி வந்தால் தேவ செவிகள் திறந்தே இருக்கும் எமது ஜெபங்கள் ஏற்றிடவே எமக்கு அடைக்கலம் தாபரம் இவரே ஞான இதயம் அருளிடும் தேவன் திரும்பி வருகின்ற திரித்துவ நாதன் வாழ்வெலாம் களிகூர்ந்திட செய்வார் - நம்பி வந்தால் சாய்ந்து போகும் நிழலது போலே உலர்ந்து உதிர்ந்திடும் மலர்களைப் போலே சால்வை போல் புவி மாறிவிட்டாலும் மாறிடாத எம் மகத்துவ ராஜன் உமது ஆண்டுகள் முடிவதில்லை-எமை தேவ கரங்கள் விடுவதும் இல்லை - நம்பி வந்தால்