பாடல் #35556
மலருக்கு மனம் தந்த
🔤 Malarukku Manam Thandha
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலருக்கு மனம் தந்த மன்னவா குயில் பாட குரல் தந்த குமரா வான வெளிக்கு நல்ல நீல நிறம் தந்து விரித்து வைத்த இறைவா - அதை எனக்கு தந்த தலைவா குயிலின் நிறம் கருப்புதான்-காண மயிலின் நிறம் நீலம் தான் குயிலும் மயிலும் தினம் கூவி ஆடுவது இறைவா எனக்கு தான் - என் தலைவா எனக்கு தான் - மலருக்கு 1. மலரும் மணமும் மனம் கமழும் மன கவலைக்கு அது மருந்தாகும் நிதமுமை துதிக்கும் மனம் என்றும் நிதம் நீ தங்கிடும் மனமுந்தன் நந்தவனமே தகிட தகிட தகதிமி தக திமிதா - மலருக்கு 2. நீதியின் நிமித்தம் பாடு வரும் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும் தாழ்மை அணிந்திட கிருபை வரும் மரணம் ஜெயமாய் முடிவினில் மாறிவிடும் - மலருக்கு 3. வானம் பூமியும் ஒழிந்துவிடும் வேத வார்த்தை என்றும்நிலைத்திருக்கும் நடந்திட பாதையில் இருள் விலகும் - என் நாவில் வசனம் தேன் என இனித்திடும் - மலருக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malarukku Manam Thandha Mannavaa Kuyil Paada Kural Thandha Kumaraa Vaana Velikku Nalla Neela Niram Thanthu Viritthu Vaittha Iraivaa - Athai Enakku Thandha Thalaivaa Kuyilin Niram Karupputhaan-kaana Mayilin Niram Neelam Thaan Kuyilum Mayilum Thinam Koovi Aatuvathu Iraivaa Enakku Thaan - En Thalaivaa Enakku Thaan - Malarukku 1. Malarum Manamum Manam Kamazhum Mana Kavalaikku Athu Marunthaakum Nidhamumai Thuthikkum Manam Enrum Nidham Nee Thangkitum Manamundhan Nandhavanamae Thakida Thakida Thakathimi Thaka Thimithaa - Malarukku 2. Neethiyin Nimittham Paatu Varum Kiristhuvin Naamam Makimaippatum Thaazhmai Aninthida Kirupai Varum Maranam Jeyamaay Mutivinil Maarivitum - Malarukku 3. Vaanam Poomiyum Ozhinthuvitum Vaedha Vaartthai Enrumnilaitthirukkum Natanthida Paathaiyil Irul Vilakum - En Naavil Vasanam Thaen Ena Initthitum - Malarukku