பாடல் #35554
பார்க்கும் போது பளபளக்குது
🔤 Paarkkum Pothu Palapalakkuthu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார்க்கும் போது பளபளக்குது உலகம் - உன்னை குப்புற தள்ளி வேடிக்கை பார்க்குது தினமும் மாறாது இந்த உலகம் - பின்னால் போகாதே இது நரகம் காலை முதல் தினம் மாலை வரை - அதி கண்ணில்படும் காட்சியெல்லாம் மனதை மயக்குது மதி மயங்க வைக்குது மின்னலென மின்னி மறையும் மின்னிய பின் இருண்டுவிடும் கண்ணிமைப் பொழுதினிலே காற்றென கரைந்துவிடும் செவிகளிலும் உன் சிந்தையிலும் - இரு தேன் துளி சுவைப்பதுபோல் மனதில் இனிக்குது இதில் இதயம் களிக்குது செம்மையென இதயம் சொல்ல இறுதியில் மரணம் வெல்ல ஏமாந்து போகுமுன்னே இயேசுவிடம் திரும்பிவிடு சிலுவையில் நம் இயேசுவின் - திரு அறையுண்டு இணைந்திருக்க உலகம் இழுக்குதோ தீய பாவம் தடுக்குதோ சிலுவை சுமந்தவரே பாடுகள் சகித்தவரே பாடுபடும் உனக்கும் எனக்கும் உதவி செய்ய வல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarkkum Pothu Palapalakkuthu Ulakam - Unnai Kuppura Thalli Vaetikkai Paarkkuthu Thinamum Maaraathu Indha Ulakam - Pinnaal Pokaathae Ithu Narakam Kaalai Mudhal Thinam Maalai Varai - Athi Kannilpatum Kaatsiyellaam Manathai Mayakkuthu Mathi Mayangga Vaikkuthu Minnalena Minni Maraiyum Minniya Pin Iruntuvitum Kannimaip Pozhuthinilae Kaarrena Karainthuvitum Sevigalilum Un Sinthaiyilum - Iru Thaen Thuli Suvaippathupol Manathil Inikkuthu Ithil Idhayam Kalikkuthu Semmaiyena Idhayam Solla Iruthiyil Maranam Vella Aemaanthu Pokumunnae Yesuvidam Thirumpivitu Siluvaiyil Nam Yesuvin - Thiru Araiyuntu Inainthirukka Ulakam Izhukkutho Theeya Paavam Thatukkutho Siluvai Sumandhavarae Paatugal Sakitthavarae Paatubatum Unakkum Enakkum Udhavi Seyya Vallavarae