பாடல் #35549
உம்மை பாடும் வரம்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
உம்மை பாடும் வரம் தாருமே - தேவா எந்தனடி பிறழாமல் உந்தன் மலரடி பணிந்தேன் - உமை 1. வானமடங்காத வான் பொருளே வானவர் வாழ்த்திடும் என்னரசே தவமின்றி நான் பெற்ற நல்வரமே தாயே தமிழே துதியிசை மலர் சூடி நிசநிச மபதப ரிகமரி நிநிச 2. கருவினில் எனைக் கண்ட காருண்யமே - உந்தன் கிருபையின் கரங்கள் என்னை அனைத்திடுமே திருமறை தெளித்தேன் என்றும் இனித்திடுமே வரம் தரும் வளம் தரும் வாழ்விலென் துணையாகும் -உமை 3. இனி வரும் பலன் நோக்கி ஓடிடவே - கொடும் மரண பயம் நீங்கி மகிழ்வுறவே பூரண சீயோனின் கீதங்களால் தினம் தினம் மலர்பதம் தழுவியென் கரம் கூப்பி -உமை 4. ஆயிரமாயிரம் தூதருடன் அகமகிழ்வேன் மணவாளனுடன் பேரின்ப கீதங்கள் என் நாவினிலே ஸ்வரங்களின் மலர் சரம் ஆயிரம் தினம் சூட்டி - உமை