பாடல் #35548
நல்லவர் கர்த்தர் நல்லவர்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
நல்லவர் கர்த்தர் நல்லவர் வல்லவர் தப்புவிக்க வல்லவர் சிங்கத்துக்கு தப்புவிக்க வல்லவர் அக்கினிக்கு தப்புவிக்க வல்லவர் பின் தொடர்ந்து ஆர்ப்பரிக்கும் பார்வோனின் சேனையை செங்கடலில் ஆழ்த்த வல்லவர் நல்லவர் யோர்தான் கரை கடக்க வல்லவர் கானானின் வாழ்வளிக்க வல்லவர் யோனாவை மீன் விழுங்கி மூன்று நாள் ஆனபின்பும் ஜீவன் தந்து காக்க வல்லவர் நல்லவர் ஆத்ம நேசர் எங்கள் இயேசு நல்லவர் - தம் பாத்ரமாக எம்மை மாற்ற வல்லவர் ஆத்துமா சரீரம் ஆன இரண்டையும் எம் தேவதேவன் அக்கினிக்குள் தள்ள வல்லவர் சாவை வென்ற இயேசு என்றும் நல்லவர் சர்வ வல்ல எங்கள் தேவன் வல்லவரே மேகம் ஏறி சென்று நாம் மோட்ச லோகம் சேர்ந்து வாழ முத்திரையாய் தூய ஆவி தந்தவர் வெள்ளத்துக்கு தப்புவிக்க வல்லவர் - என் உள்ளத்துக்குள் தங்கும் தேவன் நல்லவர் சுத்த உள்ளங் கொண்ட இஸ்ரவேலரான யாவருக்கும் என்றென்றும் கர்த்தர் நல்லவர் நேற்றும் இன்றும் என்றும் இயேசு - நல்லவர் ஏற்ற காலத்தில் உயர்த்த வல்லவர் காற்றிலும் கடல் அலைகள் சீற்றம் கொண்டு தாக்கினாலும் வார்த்தையாலே காக்க வல்லவர்