பாடல் #35542
துதிகளின் நடுவில் உலவிடும்
🔤 Thuthigalin Natuvil Ulavitum
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் நடுவில் உலவிடும் தேவன் துதிகளையே விரும்பிடுவார் துதித்தால் மனம் இரங்கிடுவார் 1. மகளே என அன்பாக அழைப்பார் பாவியென்று தீர்ப்பதில்லை பாவம் இனி செய்யாதே - என் அன்பில்லாத மனிதர் உன்னை வெறுத்திடுவார் கல்லெறிந்து கொல்லக் கூட துணிந்திடுவார் பதறாதே மனம் பதறாதே பாவம் மன்னித்தவர் பக்கத்திலிருக்க பரவசமாய் பாடிடுவாய் - துதி 2. மகனே என் பேர் சொல்லி அழைப்பார் விழிகளிரண்டும் ஒளிபெறுமென கருணையுடன் சுகம் தருவார் - என் பார்வையுனக்களித்து மனம் மகிழ்ந்திடுவார் போர்வைதனை உதறி நீயும் எழுந்திடுவாய் விலகாதே வழி விலகாதே வழியும் அவர் உயிரும் அவர் வாய்மையுமாய் இருக்கின்றவர் - துதி 3. வாலிபனே எழுந்திரு என்பார் நாலாரு வயதில் மரித்த நாயினூரின் விதவை பெற்ற பாடை தொட்டு பரமன் உன்னை எழுப்பிடுவார் தாயின் கண்ணீர் துடைத்திடவே அழைத்திடுவார் தளராதே மனம் தளராதே தாயும் அவர் தந்தையும் அவர் வாய் திறந்தே பாடிடுவாய் - துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Natuvil Ulavitum Devan Thuthigalaiyae Virumpituvaar Thuthitthaal Manam Irangkituvaar 1. Makalae Ena Anpaaga Azhaippaar Paaviyenru Theerppathillai Paavam Ini Seyyaathae - En Anpillaadha Manidhar Unnai Verutthituvaar Kallerinthu Kollak Kooda Thuninthituvaar Patharaathae Manam Patharaathae Paavam Mannitthavar Pakkatthilirukka Paravasamaay Paatituvaay - Thuthi 2. Makanae En Paer Solli Azhaippaar Vizhigalirantum Oliperumena Karunaiyudan Sugam Tharuvaar - En Paarvaiyunakkalitthu Manam Makizhnthituvaar Porvaidhanai Udhari Neeyum Ezhunthituvaay Vilakaathae Vazhi Vilakaathae Vazhiyum Avar Uyirum Avar Vaaymaiyumaay Irukkindravar - Thuthi 3. Vaalibanae Ezhunthiru Enpaar Naalaaru Vayathil Marittha Naayinoorin Vidhavai Pertra Paatai Thottu Paraman Unnai Ezhuppituvaar Thaayin Kanneer Thutaitthidavae Azhaitthituvaar Thalaraathae Manam Thalaraathae Thaayum Avar Thanthaiyum Avar Vaay Thiranthae Paatituvaay - Thuthi