பாடல் #35539
மார்கழி மாசத்திலே பெத்தலகேம்
🔤 Maarkazhi Maasatthilae Petthalakaem
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மார்கழி மாசத்திலே பெத்தலகேம் சாணத்திலே வானப்பூ மலர்ந்ததென்று வாசலிலே கோலமிட்டேன் தங்கமே தீ நரகம் அடைத்திடவே தங்கமலர் மலர்ந்ததென்று நீர் தெளித்து கோலமிட்டேன் தங்கமே 1. பாராண்ட வேந்தரெல்லாம் காணாமற் போன கதை மூவேந்தர் ஆண்ட தமிழ் நாட்டறிஞரும் உரைத்த கதை தித்திக்கின்ற தமிழினிலே சித்தர்களும் விளக்கியதை முத்தமிழில் நாவினிக்க பாடி பாடி கோலமிட்டேன் 2. போற வழிப்பாதையிலே கல்லை வைத்து கண்ணுறங்க தேவதூதர் ஏறியிறங்க கனவு கண்டே கண்விழிக்க கல்லை நட்டு எண்ணெய் வார்த்து எத்தனவன் கடந்துசெல்ல பின்னே வந்த மாந்தர் அதை வணங்கியதை பாடவந்தேன் 3. நட்ட கல்லை தெய்வமென்று நாலுமலர் சாற்றிவிட்டு சுற்றி வந்து முனுமுனுவென சொல்லும் மந்திரங்களேதடா நட்ட கல்லும் பேசிடுமோ நாதன் உள்ளே இருக்கையிலே சுட்ட சட்டி சட்டுவங்கள்தான் கறி சுவையதை அறியுமோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarkazhi Maasatthilae Petthalakaem Saanatthilae Vaanappoo Malarndhathenru Vaasalilae Kolamittaen Thanggamae Thee Narakam Ataitthidavae Thanggamalar Malarndhathenru Neer Thelitthu Kolamittaen Thanggamae 1. Paaraanda Vaendharellaam Kaanaamar Pona Kathai Moovaendhar Aanda Thamizh Naattarinjarum Uraittha Kathai Thitthikkindra Thamizhinilae Sittharkalum Vilakkiyathai Mutthamizhil Naavinikka Paati Paati Kolamittaen 2. Pora Vazhippaathaiyilae Kallai Vaitthu Kannurangga Thaevathoodhar Aeriyirangga Kanavu Kantae Kanvizhikka Kallai Nattu Enney Vaartthu Etthanavan Katanthusella Pinnae Vandha Maandhar Athai Vanangkiyathai Paadavanthaen 3. Natta Kallai Theyvamenru Naalumalar Saarrivittu Surri Vanthu Munumunuvena Sollum Manthiranggalaedhataa Natta Kallum Paesitumo Naadhan Ullae Irukkaiyilae Sutta Satti Sattuvanggalthaan Kari Suvaiyathai Ariyumo