பாடல் #35534
அருளும் திறந்தருளும்
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
அருளும் திறந்தருளும் கண்களை திறந்தருளும் வேத மகத்துவ ஆழம் அறிந்திட தேவ திரித்துவம் ஞானம் உணர்ந்திட திறந்திடும் மன கண்கள் எனக்கில்லையே - அதினால் 1. எதிரிகள் சூழ்ந்தென்னை நெருக்கையிலே - மனம் பதறியழுது தினம் புலம்புகிறேன் தேவனின் சேனைகள் சூழ்ந்தென்னை காப்பதை காண்கின்ற கண்களும் எனக்கில்லையே - அதினால் 2. வறண்ட வனாந்திரம் தொடர்ந்திடுதே - சிறு துருத்தியும் நீரின்றி உருண்டிடுதே பிள்ளையின் அழுகுரல் ஆண்டவர் கேட்டிட இச்சை நீர் சுணையொன்று தென்படவே - எனக்கு 3. உதிரத்தினால் பாவ களிம்பகற்றி - வெறும் பதர் என அலைந்த என் துயர் விலக்கி கதிர்மணியாக்கி தம் களஞ்சியம் சேர்த்திடும் கற்பகமே தற்பரனே - அற்புதனே உமை - காண 4. வழியருகேயமர்ந்த வறியவன் போல் - இரு விழிகளும் இழந்துளம் உடைந்ததினால் கதிரொளி கண்டபின் மறைந்திடும் பனித்துளி மறைவதைப் போலெந்தன் அகத்திரை - திறந்திட