பாடல் #35533
இரண்டு பக்கம் கருக்குள்ள
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
இரண்டு பக்கம் கருக்குள்ள பட்டயம் அது திருமறை வேத வசனம் அதன் ஒரு பக்கம் மட்டும் பார்த்து தமதாசைகளை திணித்து மறுபக்கம் பாராமல் மயக்கத்தில் ஆழ்ந்துவிட்ட மனிதர்களே!! மத்தேயு சுவிசேஷம் 7:7 எங்களுக்கு பிடிக்கும் - ஆனால் லூக்கா சுவிசேஷம் 6:38 நெனச்சா மனசுக்கு கசக்கும் - ரொம்ப கசக்கும் கேட்டு கேட்டு ரொம்ப பழகிப்போச்சு - இப்போ கொடுக்க சொன்னா அதை மனது ஏற்குமா 1. உள்ளதெல்லாம் கொடுத்துவிட்டால் - அப்போ குடித்தனம் நமக்கெதற்கு பணம் பொருள் நமக்கிருந்தால் - அட அடுத்தவன் தயவெதற்கு இந்த வாழ்க்கை தான் எனக்கு வேண்டும் - அடம் பட்ட துன்பங்கள் போதும் போதும் - இந்த மத்தேயு சிலுவையை சுமக்க சொன்னார் - அது சுமையா கணக்குது கல்வாரி பாதையிலே - கற்களும் தடுக்குது பாடில்லாத ஒரு பரவச வாழ்க்கையை நெனச்சு நெனச்சு மனம் ஏங்குது ஏங்குது - மத்தேயு 2. சத்துருக்களுக்கு பசிச்சா - நாங்க சாப்பாடு போடணுமா சாத்தானை மிதிப்பது போலவே காலால் மிதிக்கவே தோணுமா உலக ஐஸ்வர்யா எல்லாம் வேண்டுமென தினம் தினம் ஜெபித்திட மனசு விரும்புது - மத்தேயு 3. ஆணிகள் பாயாத - அலங்கார சிலுவை எதற்கு வாசலை திறவாத - பெரும் வீடுகள் நமக்கு எதற்கு கரையை சேராத கப்பர்நகூம் படகுகள் ஏராளம் மிதந்திடும் மாயா உலகிலே - மத்தேயு