பாடல் #35532
காலையிலே மாலையிட்டு
🔤 Kaalaiyilae Maalaiyittu
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையிலே மாலையிட்டு மாலையிலே மண்ணையள்ளி தள்ளுகின்ற கைகளடா - பாவ மனிதனின் கைகளடா ஓர் விரல் விண்ணை நோக்க மூன்று விரல் தன்னை காட்ட சுட்டு விரல் நீட்டியுன்னை குற்றப்படுத்தும் கொடிய கைகளடா நரரின் கைகளடா தோட்டத்து கனி தந்த தோகை இவள் என்று காட்டிய ஆதாமின் கைகள் தோட்டத்தை பறித்திட நாபோத்தை கொலை செய்த ஆகாபு அரசர் கதைகள் நோவாவின் பேழையை எள்ளி நகையாடி வெள்ளத்தில் மூழ்கிய கைகள் போராசையாலே குஷ்டரோகியாய் மாறிய கேயாசி கைகள் - தடு சமுத்திரம் பிளந்திட சாதனை புரிந்திட நீட்டிய மோசேயின் கைகள் ஆத்திரம் கோபம் கண்களை மறைத்திட கற்பலகை உடைத்திட்ட கைகள் கைவேலையான கன்றுக்குட்டி செய்து கெட்டுப்போன ஆரோனின் கைகள் சொத்திலொரு பங்கை மறைத்து வைத்ததால் செத்து போன அனனியா கைகள் - வீணாய் ஆதாமுக்குள் செத்த அகிலம் மீட்டுவிட்ட தேவ ஆட்டுக்குட்டி கதைகள் பார சிலுவையதை தூக்கமுடியாமல் தூக்கி சுமந்த கைகள் ஐங்காய மேற்றிட ஆணி துளைத்திட ஆண்டவர் நீட்டிய கைகள் ஐயனே என் ஆசையாய் அழைத்து மகன் என அணைத்திடும் கைகள் - எனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyilae Maalaiyittu Maalaiyilae Mannaiyalli Thallukindra Kaigalataa - Paava Manidhanin Kaigalataa Or Viral Vinnai Nokka Moonru Viral Thannai Kaatta Suttu Viral Neettiyunnai Kurtrappatutthum Kotiya Kaigalataa Nararin Kaigalataa Thottatthu Kani Thandha Thokai Ival Enru Kaattiya Aathaamin Kaigal Thottatthai Paritthida Naapotthai Kolai Seytha Aakaapu Arasar Kathaigal Novaavin Paezhaiyai Elli Nakaiyaati Vellatthil Moozhkiya Kaigal Poraasaiyaalae Kushtarokiyaay Maariya Kaeyaasi Kaigal - Thatu Samutthiram Pilanthida Saadhanai Purinthida Neettiya Mosaeyin Kaigal Aatthiram Kobam Kankalai Maraitthida Karpalakai Utaitthitta Kaigal Kaivaelaiyaana Kanrukkutti Seythu Kettuppona Aaronin Kaigal Sotthiloru Pangkai Maraitthu Vaitthathaal Setthu Pona Ananiyaa Kaigal - Veenaay Aathaamukkul Settha Akilam Meettuvitta Thaeva Aattukkutti Kathaigal Paara Siluvaiyathai Thookkamutiyaamal Thookki Sumandha Kaigal Aingkaaya Maerrida Aani Thulaitthida Aandavar Neettiya Kaigal Aiyanae En Aasaiyaay Azhaitthu Makan Ena Anaitthitum Kaigal - Enai