பாடல் #35510
கடலின் அலைகள் அடங்குமா
🔤 Katalin Alaigal Adangkumaa
🎙 Evg. வியாசர் லாரன்ஸ் • 💿 கன்மலை ராகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடலின் அலைகள் அடங்குமா உடைந்த கலயம் இணையுமா சிவிங்கி புள்ளிகள் மாறிப்போகுமா - அந்த எத்தியோப்பியன் நிறம் வெளுக்குமா - உலகில் வேலியின் அருகே செல்லும் பழக்கம் ஏனம்மா கண்ணைப் பறிக்கும் கனிகள் உந்தன் தாகம் தீர்க்குமா கள்வன் அவன் சொன்ன வார்த்தை உண்மையாகுமா மாலை நேரத்தில் மேல்மாடி ஓரத்தில் கவிஞனவன் கண்கள் கலங்கி போனதேனம்மா - ஒரு பெண்ணுக்காக கொலையும் செய்ய துணிந்ததேனம்மா விதையொன்று விதைக்க வேறு செடி முளைத்திடுமா அவர் நடாத நாற்றுகள் இங்கு நிலைத்து நின்றிடுமா மாசில்லாத கொடிகள் குறைந்த கனிகள் கொடுக்குமா' வேலிகள் பயிரை இங்கு மேய்த்திடல் தகுமா தவறிப்போன ஆட்டைப்போல கதறலாகுமா நல்ல மேய்ப்பன் செல்லும் வழியை விலக்கலாகுமா கடலின் அலைகள் அடங்குமே உடைந்த கலயம் இணையுமே சிவிங்கி புள்ளிகள் மாறிப்போகுமே உதிரத்தாலே மாறிப்போகுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katalin Alaigal Adangkumaa Utaindha Kalayam Inaiyumaa Sivingki Pulligal Maarippokumaa - Andha Etthiyoppiyan Niram Velukkumaa - Ulakil Vaeliyin Arukae Sellum Pazhakkam Aenammaa Kannaip Parikkum Kanigal Undhan Thaagam Theerkkumaa Kalvan Avan Sonna Vaartthai Unmaiyaakumaa Maalai Naeratthil Maelmaati Oratthil Kavinjanavan Kankal Kalangki Ponathaenammaa - Oru Pennukkaaga Kolaiyum Seyya Thunindhathaenammaa Vithaiyonru Vithaikka Vaeru Seti Mulaitthitumaa Avar Nataadha Naarrugal Ingku Nilaitthu Ninritumaa Maasillaadha Kotigal Kuraindha Kanigal Kotukkumaa' Vaeligal Payirai Ingku Maeytthidal Thakumaa Thavarippona Aattaippola Katharalaakumaa Nalla Maeyppan Sellum Vazhiyai Vilakkalaakumaa Katalin Alaigal Adangkumae Utaindha Kalayam Inaiyumae Sivingki Pulligal Maarippokumae Uthiratthaalae Maarippokumae