பாடல் #35503
எருசலேம் என்னும் நகரினிலே
🎙 கிறிஸ்தவ பாடல்
எருசலேம் என்னும் நகரினிலே பெத்லகேம் என்னும் ஊரினிலே எனக்காய் இயேசு பிறந்தாரே என் பாவம் எல்லாம் போக்கினாரே (2) 1. சூசை மரியின் மகனாக இரவில் மாட்டு தொழுவமதில் தேவ தூதர்கள் முன்னிலையில் பாலன் இயேசு ஜெனித்துவிட்டார் (2) எருசலேம் 2. மேய்ப்பர்கள் யாவரும் வணங்கிடவே சாஸ்திரிகள் மூவரும் துதித்திடவே வானின் விண்மீன் ஒளி தரவே மனுகுல தலைவர் உதித்து விட்டார் (2) எருசலேம் 3. பிதாவின் மறு ரூபமாய் மீட்பராய் மீண்டும் பூமியிலே மனிதர்கள் மனம் மாறிடவே மைதன் உள்ளத்தில் தோன்றிவிட்டார் (2) எருசலேம்