பாடல் #3550
மனந்திரும்ப இன்னும்
🔤 Mananthirumba Innum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனந்திரும்ப இன்னும் மனமில்லையோ உனக்கு மறு வாழ்வு தர இங்கு இயேசு இல்லையோ இனம் மதம் ஜாதி என்னும் இறுமாப்பை விட்டு இன்னும் இறங்கி நீ வரவில்லையோ-மகனே தினமவர் வேதத்தைப் படித்தும் உன் சிந்தையில் தெளிவின்னும் வரவில்லையோ-மகனே பணம் பட்டம் பதவி மோகம் உனைவிட்டு நீங்கி விடும் காலமும் வரவில்லையோ-மகனே சினம் விட்டு நீயும் உன் சீரான வாழ்வுக்கு வழிவகுக்க எண்ணமில்லையோ உனை மீட்ட இரட்சகரின் உன்னத சத்தியத்தை ஏற்றிட மனமில்லையோ-மகனே உன் பாவச் சிறைமீட்க உலகினில் இரட்சகனாய் நம் இயேசு வரவில்லையோ பெண் பாவச் சொல் கேட்டு ஆண் பாவம் தின்ற பழம் நம் பாவம் தொடரவில்லையோ-மகனே உன் மனச் சாட்சியினை இன்னும் ஏன் ஏமாற்றி வாழ்கிறாய் புரியவில்லையோ ஞானம் எனக்கில்லையென்று நாளை நாளையென்று காலத்தைக் கடத்துவதேன்-மகனே நிலையற்ற இவ்வாழ்வை நிலையென்று நம்பியே நீ வேதத்தை படிப்பது ஏன் கடுகளவு விசுவாசம் இல்லையெனில் உன் மனதில் கர்த்தரின் அன்பு இல்லையே-மகனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mananthirumba Innum Manamillaiyo Unakku Maru Vaazhvu Thara Ingku Yesu Illaiyo Inam Matham Jaathi Ennum Irumaappai Vittu Innum Irangki Nee Varavillaiyo-makanae Thinamavar Vaedhatthaip Patitthum Un Sinthaiyil Thelivinnum Varavillaiyo-makanae Panam Pattam Pathavi Mogam Unaivittu Neengki Vitum Kaalamum Varavillaiyo-makanae Sinam Vittu Neeyum Un Seeraana Vaazhvukku Vazhivakukka Ennamillaiyo Unai Meetta Iratsakarin Unnatha Satthiyatthai Aerrida Manamillaiyo-makanae Un Paavach Siraimeetka Ulakinil Iratsakanaay Nam Yesu Varavillaiyo Pen Paavach Sol Kaettu Aan Paavam Thindra Pazham Nam Paavam Thodaravillaiyo-makanae Un Manach Saatsiyinai Innum Aen Aemaarri Vaazhkiraay Puriyavillaiyo Njaanam Enakkillaiyenru Naalai Naalaiyenru Kaalatthaik Katatthuvathaen-makanae Nilaiyartra Ivvaazhvai Nilaiyenru Nampiyae Nee Vaedhatthai Patippathu Aen Katugalavu Visuvaasam Illaiyenil Un Manathil Karttharin Anpu Illaiyae-makanae