பாடல் #3544
மத்திய பானத்தில் மிக நித்தியம் கருத்து
🔤 Matthiya Paanatthil Miga Nitthiyam Karutthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மத்திய பானத்தில் மிக நித்தியம் கருத்து வைக்கும் மானிடரே கேளீர். புத்தி உமக்குண்டானால் தெளிந்து குடியும் சும்மா. 1. பாம்பை மடியில் வைப்பாரோ? பழகினாலும் பயமின்றி அதை மொய்ப்பரோ? வேம்பு கசப்பில் என்பாரோ? - மது குடிக்க விரும்புகின்றீர் நல்லதோ? நாம் பிசகோம் என்றும் நடந்து திரிவோம் என்றும் வீம்புகள் சொல்வதேன்? விழுவீர் விழுவீர் காணும். 2. கைப்பொருள் இழந்திடவும் - புதல்வரோடு காதலி அழுந்திடவும் மெய்ப்பொருள் மறைந்திடவும் எரி நரகில் வீழ்ந்ததில் உறைந்திடவும் தற்பரன் அருள் இங்கு தான் இழக்கவும் வேண்டின் எப்படியும் குடியும் இளைத்துச் சுணங்கிக் கொண்டு.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Matthiya Paanatthil Miga Nitthiyam Karutthu Vaikkum Maanidarae Kaeleer. Putthi Umakkuntaanaal Thelinthu Kutiyum Summaa. 1. Paampai Matiyil Vaippaaro? Pazhakinaalum Payaminri Athai Moypparo? Vaempu Kasappil Enpaaro? - Mathu Kutikka Virumpukinreer Nallatho? Naam Pisakom Enrum Natanthu Thirivom Enrum Veempugal Solvathaen? Vizhuveer Vizhuveer Kaanum. 2. Kaipporul Izhanthidavum - Pudhalvarotu Kaadhali Azhunthidavum Meypporul Marainthidavum Eri Narakil Veezhndhathil Urainthidavum Tharparan Arul Ingku Thaan Izhakkavum Vaentin Eppatiyum Kutiyum Ilaitthuch Sunangkik Kontu.