பாடல் #35437
உலகிலுள்ள ஜனங்களுக்கு
🔤 Ulakilulla Jananggalukku
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகிலுள்ள ஜனங்களுக்கு உண்மை மிகுந்த மகிழ்ச்சியான நல்ல செய்தி தூதன் சொல்லிட உன்னதத்திலே மகிமை பூமியில் சமாதானம் மனுஷர் மீது பிரியமானதே இயேசு பிறந்த நல்ல செய்தியை ஏழை மேய்ப்பர் கேட்டு சென்றனர் நாமும் அந்த செய்தி கேட்டதும் தேவன் அவரை நாடி சேருவோம் 1. பாவத்தாலே வந்த சாபம் நீக்க வந்தவர் பாசமுள்ள இயேசு என்ற நாமம் கொண்டவர் வாசம் செய்ய இதயமதை ஆசையுடன் திறந்தளிப்போம் நாளும் நம்மை ஆளுகை செய்வார் 2. யூதராஜ சிங்கமாக அவதரித்தவர் நீதியுள்ள சூரியனால் வந்துதித்தவர் ஆதி மனிதன் செய்த பாவம் ஆதாமால் வந்த பாவம் ஆதரையில் நீக்க தோன்றினார் 3. தீர்க்க உரைத்த வாக்குப்போல மாந்தர் பாவத்தை தீர்க்க வந்த இரட்சகராய் இயேசு நாமத்தை பாரில் பாடி புகழ்ந்து போற்றி பாமரர்களுக்கும் சாற்றி பரம தேவசித்தம் செய்குவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakilulla Jananggalukku Unmai Mikundha Makizhchsiyaana Nalla Seythi Thoodhan Sollida Unnathatthilae Makimai Poomiyil Samaathaanam Manushar Meethu Piriyamaanathae Yesu Pirandha Nalla Seythiyai Aezhai Maeyppar Kaettu Sendranar Naamum Andha Seythi Kaettathum Devan Avarai Naati Saeruvom 1. Paavatthaalae Vandha Saabam Neekka Vandhavar Paasamulla Yesu Endra Naamam Kondavar Vaasam Seyya Idhayamathai Aasaiyudan Thirandhalippom Naalum Nammai Aalukai Seyvaar 2. Yoodharaaja Singgamaaga Avatharitthavar Neethiyulla Sooriyanaal Vanthuthitthavar Aathi Manidhan Seytha Paavam Aathaamaal Vandha Paavam Aadharaiyil Neekka Thonrinaar 3. Theerkka Uraittha Vaakkuppola Maandhar Paavatthai Theerkka Vandha Iratsakaraay Yesu Naamatthai Paaril Paati Pugazhnthu Porri Paamararkalukkum Saarri Parama Thaevasittham Seykuvom