பாடல் #35434
முன்புறம் செங்கடல் பின்புறம்
🔤 Munpuram Senggatal Pinpuram
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முன்புறம் செங்கடல் பின்புறம் சேனைகள் தப்பிக்க வழியின்றி தடுமாறி நிற்கின்றேன் தயவோடு நீர் இறங்க வேண்டுமையா 1. அழிந்திட வேண்டிய ஆபத்து வேளையில் அருகினில் வந்தெனை ஆற்றிட வேண்டுமே அலைந்திடும் என்மதி தொலைந்திடும் நிம்மதி அரவணைத் தாற்றிடநீர் வர வேண்டுமே 2. மூடிய செங்கடல் பிரிந்திட வேண்டுமே வாடிடும் நெஞ்சமும் வளம்பெற வேண்டுமே தேடிடும் அமைதியை நீர் தர வேண்டுமே தேற்றிடும் உம் கரம் துணைவர வேண்டுமே 3. சோகத்தில் மடிந்திடும் என்நிலை அறிந்திடும் தாகத்தை தீர்த்திட கன்மலை திறந்திடும் மேகத்தில் இராப்பகல் மறைத்தெனை நடத்திடும் கோபத்தில் கைவிடா கிருபையில் நிறைத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Munpuram Senggatal Pinpuram Saenaigal Thappikka Vazhiyinri Thatumaari Nirkinraen Thayavotu Neer Irangga Vaentumaiyaa 1. Azhinthida Vaentiya Aabatthu Vaelaiyil Arukinil Vanthenai Aarrida Vaentumae Alainthitum Enmathi Tholainthitum Nimmathi Aravanaith Thaarridaneer Vara Vaentumae 2. Mootiya Senggatal Pirinthida Vaentumae Vaatitum Nenjjamum Valampera Vaentumae Thaetitum Amaithiyai Neer Thara Vaentumae Thaerritum Um Karam Thunaivara Vaentumae 3. Sogatthil Matinthitum Ennilai Arinthitum Thaagatthai Theertthida Kanmalai Thiranthitum Maegatthil Iraappakal Maraitthenai Natatthitum Kobatthil Kaivitaa Kirupaiyil Niraitthitum