பாடல் #35431
மகிமையின் ராஜாவாகிய
🔤 Makimaiyin Raajaavaakiya
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் ராஜாவாகிய கர்த்தர் பெரியவர் மறுமையில் நமை பரலோகில் சேர்த்திட உரியவர் கர்த்தர் பெரியவர் - 4 1. வானம் தேவன் வாசம் செய்யும் சிங்காசனம் பூமி தேவன் கால்கள் வைக்கும் பாதஸ்தலம் சர்வ வல்ல இயேசு போல யாருமில்லை பாரினில் 2. ஒருவர்கூட சேர்ந்திடாத பேரொளியிலே ஒருவராக வாசம் செய்யும் ஜீவ ஒளியவர் உன்னதத்தில் உயர்ந்து நிற்கும் உண்மை தேவன் இயேசுவே 3. தேசமே நீ பயப்படாதே மகிழ்ந்து களிகூறு தேவன் பெரிய காரியங்கள் செய்ய இடங்கொடு தீமை யாவும் நீக்கி உந்தன் தேவை யாவும் ஈந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Raajaavaakiya Kartthar Periyavar Marumaiyil Namai Paralokil Saertthida Uriyavar Kartthar Periyavar - 4 1. Vaanam Devan Vaasam Seyyum Singkaasanam Poomi Devan Kaalkal Vaikkum Paadhasthalam Sarva Valla Yesu Pola Yaarumillai Paarinil 2. Oruvarkooda Saernthitaadha Paeroliyilae Oruvaraaga Vaasam Seyyum Jeeva Oliyavar Unnathatthil Uyarnthu Nirkum Unmai Devan Yesuvae 3. Thaesamae Nee Payappataathae Makizhnthu Kalikooru Devan Periya Kaariyanggal Seyya Idangkotu Theemai Yaavum Neekki Undhan Thaevai Yaavum Eenthitum