பாடல் #35430
அலைமோதும் புவிவாழ்வில்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
அலைமோதும் புவிவாழ்வில் நானோ தடுமாறும் படகாக ஆனேன் நிலைமாறும் என் வாழ்வில் ஏனோ நிம்மதி எந்நாளும் கானேன் 1. என் வானில் இருள்சூழும் நேரம் இயேசுவே ஒளியாக வாரும் மனமே தினம் சோர்ந்திடும் நேரம் மாதேவன் அருள் வந்து சேரும் 2. பெருங்காற்று புயல் வீசும் நேரம் நொறுங்காமல் எனைக் காக்க தேவன் வருவார் வளம் வாழ்வினில் தருவார் ஒருநாளும் கைவிட மாட்டார் 3. துணையின்றி தவிக்கின்றபோது தனிமையில் துவளாது காக்க கனிவாய் கரம் நீட்டியே காப்பார் கலங்காமல் வாழ்ந்திட செய்வார்