பாடல் #35429
நீ போகும் இடமெல்லாம்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கின்றார் பலங்கொண்டு திடமனதாயிருந்திடு நீ திகையாதே நீ கலங்காதே 1. தம் தாசன் மோசேயின் உடன் என்றும் தயவோடு இருந்த தேவன் உன்னுடனும் கனிவோடு நடத்துவார் கரம் நீட்டித் தாங்குவார் கலங்காமல் கர்த்தரையே நீ நம்புவாய் 2. ஈசாக்கின் யாக்கோபின் உடன் நின்றார் யோசேப்பின் துணையாக உடன் சென்றார் தம் சொந்த ஜனங்களின் முன் சென்ற தேவனே மறவாமல் உனைக் காத்து தினம் தேற்றுவார் 3. தாவீதின் உடன் என்றும் இருந்தவரே தாயன்பு பொழிந்துன்னை காத்திடுவார் உலகத்தின் முடிவு நாள்வரை உந்தன் கூடவே இருக்கின்ற தேவனையே நீ நம்புவாய்