பாடல் #35423
சௌந்தர்யம் வஞ்சனை
🔤 Saundharyam Vanjjanai
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சௌந்தர்யம் வஞ்சனை உள்ளது அழகும் வீணானது இளவயதும் வாலிபமும் மாயையானது - என் இயேசுவின் அன்பு ஒன்றை என்றும் நிரந்தரமானது 1. கிருபையாய் அவர் தந்த வாலிபம் - அந்த இறைவனுக்கே உரித்தாகட்டும் எந்தன் ஆவி ஆத்மா தேகம் சொந்தமாய் அவருக்கே மாறட்டும் 2. அழிந்திடும் உலகத்தின் ஆசைகள் - அந்த அகத்தினின்றே மறைந்தோடட்டும் தூய ஆவி தேவ அன்பு நாளும் என்னை ஆளட்டும் 3. கண்களின் இச்சைகள் நீங்கட்டும் - என் கர்த்தரின் வல்லமை தங்கட்டும் மாம்சச் சிந்தை மாறி எந்தன் மனதினில் பரிசுத்தம் ஓங்கட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saundharyam Vanjjanai Ullathu Azhakum Veenaanathu Ilavayathum Vaalibamum Maayaiyaanathu - En Yesuvin Anpu Onrai Enrum Nirandharamaanathu 1. Kirupaiyaay Avar Thandha Vaalibam - Andha Iraivanukkae Uritthaagattum Endhan Aavi Aathmaa Thaegam Sondhamaay Avarukkae Maarattum 2. Azhinthitum Ulakatthin Aasaigal - Andha Agatthininrae Marainthodattum Thooya Aavi Thaeva Anpu Naalum Ennai Aalattum 3. Kankalin Ichsaigal Neenggattum - En Karttharin Vallamai Thanggattum Maamsach Sinthai Maari Endhan Manathinil Parisuttham Onggattum