பாடல் #35420
நாற்பது நாள் இரவும் பகலும்
🔤 Naarpathu Naal Iravum Pakalum
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாற்பது நாள் இரவும் பகலும் பெருமழை பொழிந்ததன்று பேழை ஒன்று எழும்பி நின்று நோவாவைக் காத்ததன்று ஏலேலோ ஏலேலோ ஐலசா - 2 1. மனிதர்கள் செய்த பாவத்தினிமித்தம் - தேவன் மனஸ்தாபம் அடைந்தே ஜலத்தால் அழித்தார் அவணியில் உத்தமன் நோவா நிமித்தமாக அவனது குடும்பத்தாரும் அன்று பிழைத்தார் 2. ஆதரை மீதினில் அழிவே வந்திடும் நேரம் - தேவன் ஆதரவாகவே நின்றார் அவரது அழைப்பைப் பெற்றோர் அடைவார் நன்மை அழிவை காண்பது இல்லை அதுவே உண்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naarpathu Naal Iravum Pakalum Perumazhai Pozhindhathanru Paezhai Onru Ezhumpi Ninru Novaavaik Kaatthathanru Aelaelo Aelaelo Ailasaa - 2 1. Manidharkal Seytha Paavatthinimittham - Devan Manasthaabam Atainthae Jalatthaal Azhitthaar Avaniyil Utthaman Novaa Nimitthamaaga Avanathu Kutumbatthaarum Anru Pizhaitthaar 2. Aadharai Meethinil Azhivae Vanthitum Naeram - Devan Aadharavaagavae Ninraar Avarathu Azhaippaip Perror Ataivaar Nanmai Azhivai Kaanpathu Illai Athuvae Unmai