பாடல் #35409
வானத்திலே பார் வால்நட்சத்திரம்
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
வானத்திலே பார் வால்நட்சத்திரம் தெரியுது - நம்ம வானவர் மண்ணில் பிறந்தகதையும் புரியுது இரட்சிப்பு என்னும் தீபம் அங்கே எரியுது - அந்த இரட்சகரையே உலகம் இப்ப அறியுது 1. தூதரங்கு கூடிநின்று பாடுகின்றார் கீதம் நாதனவர் பிறந்ததாலே இனியில்லையே சேதம் ஆண்டவரின் பிறப்பினையே முன்னுரைத்த வேதம் ஆதரையில் பறந்ததுவே ஜாதிமத பேதம் 2. மேய்ப்பரது உள்ளத்திலே நிறைந்தது சந்தோஷம் மேதினியில் நீங்கியது பாவமெனும் தோஷம் நல்லவனைப் போல்நடித்த சத்துருவின் வேஷம் கலந்ததினால் அனைவர்நெஞ்சில் இயேசு என்னும் கோஷம் 3. அன்னை மரியாளின் திருமகனாகவே தோற்றம் அவணியில் வாழும் மாந்தர் வாழ்வினிலே மாற்றம் ஆண்டவரின் பிறப்பினாலே பகைவருக்கு சீற்றம் அவர்வரவை அன்புடனே ஏற்ற உள்ளம் போற்றும்