பாடல் #35408
பாவ இருள் நீங்கியதே
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
பாவ இருள் நீங்கியதே ஜீவ ஒளி வீசியதே வேதம் நிறைவேறினதே வேந்தனவர் பிறந்ததினால் 1. பாதை அதை மாறும் - இந்த பாரின் மாந்தரும் மாறிடவே வாதை அதை நீக்கும் - வல்ல தேவன் புவியில் தோன்றினரே 2. அன்பின் உருவாகி - இந்த மண்ணில் விண்ணவர் வந்தனரே மனதின் துக்கம் நீக்கி - எங்கள் மன்னன் மகிழ்ச்சி தந்தனரே 3. தாழ்வில் இருந்தெம்மை - இந்த தரணியில் உயர்த்திட உதித்தனரே ஏழ்மை அவர் ஏற்று - நல்ல வாழ்வை நமக்கு ஈந்தனரே