பாடல் #35405
ஆயிரம் பதினாயிரம்
🔤 Aayiram Pathinaayiram
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் பதினாயிரம் நாவுகள் போதுமோ அன்பே உமைப் புகழ்ந்து பாட - எனது நாட்களும் போதுமோ 1. திறமை அறிவொன்றும் இல்லை - எந்த தியாகம் நான் செய்ததில்லை - உந்தன் கிருபை என்னைச் சூழ்ந்து இரக்கம் எனைத்தாங்கி கருணை எனைக் காத்ததாலே - உமை காலமெல்லாம் உள்ளம் பாடும் 2. கலக்கம் எனை வந்து சேரும் - என் கண்கள் குளமாக நேரும் - உம் கரங்கள் கண்ணீரை துடைத்து எனைதேற்றும் கவலைதனை யாவும் மாற்றும் என் இதயம் உமையென்றும் போற்றும் 3. தனிமை எனை வாட்டும் வேளை - நீர் இனிமை என் நெஞ்சில் தந்தீர் - என் இளமை நாட்கொண்டு முதுமை ஆட்கொள்ளும் நிலைமை வரை சுமப்பதாலே - உந்தன் பெருமைதனைப் பாடி வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Pathinaayiram Naavugal Pothumo Anpae Umaip Pugazhnthu Paada - Enathu Naatkalum Pothumo 1. Thiramai Arivonrum Illai - Endha Thiyaagam Naan Seythathillai - Undhan Kirupai Ennaich Soozhnthu Irakkam Enaitthaangki Karunai Enaik Kaatthathaalae - Umai Kaalamellaam Ullam Paatum 2. Kalakkam Enai Vanthu Saerum - En Kankal Kulamaaga Naerum - Um Karanggal Kanneerai Thutaitthu Enaithaerrum Kavalaidhanai Yaavum Maarrum En Idhayam Umaiyenrum Porrum 3. Thanimai Enai Vaattum Vaelai - Neer Inimai En Nenjsil Thantheer - En Ilamai Naatkontu Muthumai Aatkollum Nilaimai Varai Sumappathaalae - Undhan Perumaidhanaip Paati Vaazhvaen